Singer suchitra: ‘பவர் வேணும்னா படுக்கைய கூட.. அந்த ஆண்தான் காரணம்’ -விஜய் டிவிக்குள் நடப்பது என்ன? - சுசித்ரா!-singer suchitra latest interview about manimegalai priyanka controversy what is really happening in vijay tv - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singer Suchitra: ‘பவர் வேணும்னா படுக்கைய கூட.. அந்த ஆண்தான் காரணம்’ -விஜய் டிவிக்குள் நடப்பது என்ன? - சுசித்ரா!

Singer suchitra: ‘பவர் வேணும்னா படுக்கைய கூட.. அந்த ஆண்தான் காரணம்’ -விஜய் டிவிக்குள் நடப்பது என்ன? - சுசித்ரா!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 18, 2024 09:53 AM IST

Singer suchitra: விஜய் டிவியில் எப்போது பிரதீப் என்பவரின் ஆதிக்கம் அதிகமானதோ அப்போதிலிருந்து தான் இது போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. அவர் அவருக்கென்று ஒரு குரூப்பை சேனலுக்குள் செட் செய்ய முயற்சிகளை எடுத்தார். - விஜய் டிவிக்குள் நடப்பது என்ன?

Singer suchitra: ‘பவர் வேணும்னா படுக்கைய கூட.. அந்த ஆண்தான் காரணம்’ -விஜய் டிவிக்குள் நடப்பது என்ன? - சுசித்ரா!
Singer suchitra: ‘பவர் வேணும்னா படுக்கைய கூட.. அந்த ஆண்தான் காரணம்’ -விஜய் டிவிக்குள் நடப்பது என்ன? - சுசித்ரா!

இது குறித்து அவர் பேசும் போது," பிரியங்கா மணிமேகலை விவகாரத்தை பார்க்கும் போது, வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ திரைப்படம்தான் எனக்கு ஞாபகம் வருகிறது.

பிரியாதான் உதாரணம்

‘ஆடுகளம்’ திரைப்படத்தில் குரு சிஷ்யனுக்கு இடையிலான தொழில் போட்டியும், அதனால் ஏற்படும் வன்மமும் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். குருவானவர் தன்னுடைய சிஷ்யன் தன்னை விட அதிகமாக வளர்கிறான் என்றால் ஒன்று, அவரை வெட்டி விட்டு, தான் வளர வேண்டும் என்று நினைப்பார். இல்லை, அவரை தன்னுடைய வாரிசு என்று நினைத்து, அவனை வளர்த்து விட நினைப்பார். அதற்கு உதாரணம் தொகுப்பாளர் பிரியா. அவர் சக தொகுப்பாளர்களுக்கு போதுமான ஸ்பேசை கொடுத்து, அவர்கள் வளர பல வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

விஜய் டிவியில் எப்போது பிரதீப் என்பவரின் ஆதிக்கம் அதிகமானதோ அப்போதிலிருந்து தான் இது போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பித்தன. அவர் அவருக்கென்று ஒரு குரூப்பை சேனலுக்குள் செட் செய்ய முயற்சிகளை எடுத்தார். அவர்தான் டிடி உட்பட தேவையில்லாத நபர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்து வளர்த்து விட்டார்.

அதிகார மோதல்

அவர்கள் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி, தாங்களும் இந்த சேனலில் மிகப்பெரிய ஆள் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டனர். அதுதான் அங்கு பிரச்சினையே. ஆனால், இது நிறுவனம் சார்ந்த இந்த நெப்போட்டிசம் கிடையாது. இது எப்படியான நெப்போட்டிசம் என்றால், ஒன்றாக சேர்ந்து சரக்கு அடிப்பது, முத்தம் கொடுத்துக் கொள்வது... ஏன்… அதை தாண்டி கூட நடந்து இருக்கலாம். சேனலுக்குள் என்ன பிரச்சினை என்றாலும், பிரதீப்பை ஒரு கடவுள் போல பாவித்து, அவரிடம் எல்லாவற்றையும் கொண்டு செல்வது உள்ளிட்டவை செய்யப்படும். இதில் கடுமையாக பாதிக்கப்பட்டவர் தொகுப்பாளர் பாவனா. அதன் பின்னர் அவர் விஜய் டிவியில் இருந்து வெளியேறினார். இப்போது மணிமேகலை வெளியேறி இருக்கிறார்.

முன்னதாக, பாடகி சுசித்ரா மணிமேகலைக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த பேட்டி இங்கே!

அதில், “ குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்ன அவ்வளவு முக்கியமா? மணிமேகலையின் துணிச்சலான செயலை நான் பாராட்டுகிறேன். நான் அவருக்கு தான் ஆதரவாக நிற்கிறேன். நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு மணிமேகலை தெளிவான வீடியோ பதிவு செய்து இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து வீடியோ போட தனியான துணிச்சல் அந்த பெண்ணுக்கு இருக்கிறது.

என் தம்பி மாதிரி

பிரியங்கா எந்த மாதிரியான பொம்பள என்று அவளுடைய முன்னாள் கணவரை கேட்டால் தெரியும். அவர் என்னுடைய தம்பி பையன். ரொம்பவும் நல்ல பையன், நேர்மையானவன். அவனுடைய வாழ்க்கையை நாசம் ஆக்கிட்டா. இதை பற்றி நான் பேசினால் வதந்தி கிளம்புகிறேன் என்று சொல்வார்கள். இந்த விஷயத்தில் என்னுடைய ஆதரவு மணிமேகலைக்கு தான் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.