Singappenne: பம்புசெட்டில் குளிக்கச்சென்ற ஆனந்தி.. பழிவாங்கத்துடிக்கும் வில்லன்.. நீருக்குள் விழுந்த மித்ரா - என்னவாம்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne: பம்புசெட்டில் குளிக்கச்சென்ற ஆனந்தி.. பழிவாங்கத்துடிக்கும் வில்லன்.. நீருக்குள் விழுந்த மித்ரா - என்னவாம்?

Singappenne: பம்புசெட்டில் குளிக்கச்சென்ற ஆனந்தி.. பழிவாங்கத்துடிக்கும் வில்லன்.. நீருக்குள் விழுந்த மித்ரா - என்னவாம்?

Marimuthu M HT Tamil Published Aug 12, 2024 11:44 AM IST
Marimuthu M HT Tamil
Published Aug 12, 2024 11:44 AM IST

Singappenne: பம்புசெட்டில் குளிக்கச்சென்ற ஆனந்தி மற்றும் பழிவாங்கத்துடிக்கும் வில்லன் மற்றும் நீருக்குள் விழுந்த மித்ரா ஆகியோரின் செயல் அடங்கிய காட்சிகளை இன்றைய சிங்கப்பெண்ணே சீரியல் எபிசோடில் பார்க்கலாம்.

Singappenne: பம்புசெட்டில் குளிக்கச்சென்ற ஆனந்தி.. பழிவாங்கத்துடிக்கும் வில்லன்.. நீருக்குள் விழுந்த மித்ரா - என்னவாம்?
Singappenne: பம்புசெட்டில் குளிக்கச்சென்ற ஆனந்தி.. பழிவாங்கத்துடிக்கும் வில்லன்.. நீருக்குள் விழுந்த மித்ரா - என்னவாம்?

இன்றைய எபிசோட்:

சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய நாளுக்கான முதல் புரோமோவில், கதையின் நாயகி ஆனந்தியின் ஊரான சிவரக்கோட்டைக்கு, அவரது அலுவலகத்தைச் சேர்ந்தோர் எல்லோரும் அங்கு நடக்கும் கோயில் திருவிழாவுக்கு மொத்தமாக வேனில் புறப்படுகின்றனர். அதில் ஆனந்தி பணிபுரியும் இடத்தின் முதலாளி, சிவரக்கோட்டை ஊருக்குப் போவதே, ஆனந்தியின் பெற்றோரிடம் தான் ஆனந்தியைக் காதலிப்பதைச் சொல்லி, சம்மதம்பெறத்தான் என்று மனதுக்குள் நினைக்கிறார்.

சிவரக்கோட்டை பயணம் முடிவதற்குள், நான் தான் அழகன் என்று ஆனந்தியிடம் சொல்லப்போவதாக, அன்பு மனதுக்குள் நினைத்துவிடுகிறார்.

ஆனந்திக்கு ஊரில் சென்று இறங்கியதும் ஆடல், பாடல், வேட்டு வெடித்து, ஃபிளெக்ஸ் வைத்து பிரமாண்ட வரவேற்பு நடக்கிறது. அவரும் அந்த வரவேற்பில் கலந்துகொண்டு மாலையைப் பெற்றுக்கொண்டு டான்ஸ் ஆடுகிறார்.

பஞ்சம் பிழைக்க ஒத்த ஆளாக ஊரை விட்டு ஓடிட்டு, ஒரு கூட்டத்தையே திரட்டிட்டு வந்திருக்கியா என சிவரக்கோட்டையில் இருக்கும் வில்லன் சுயம்புலிங்கம் மனதுக்குள் கடுப்பாகிறார்.

மேலும் ’இந்த சுயம்புலிங்கத்தை மீறி, இந்த ஊர் எல்லையைத் தாண்ட முடியாது’ என்கிறார்.

இரண்டாவது புரோமோவில், ஆனந்தி, தன் அலுவலகப் பணியாளர்கள் அனைவரையும் வயல்வரப்பில் இருக்கும் பம்புசெட்டில் குளிக்க அழைத்துச் செல்கிறார். இது நகரத்தைச் சார்ந்த மித்ராவுக்கும் சிலருக்கும் பிடிக்கவில்லை.

பின், ஆனந்தி, அவர்களை வயல் வரப்பில், ஒருவர் முதுகை ஒருவர் பிடித்துக்கொண்டு நடந்தால், எளிதாக பம்பு செட் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிடலாம் என்கிறார். அதைத்தொடர்ந்து, அவரது முதலாளி, ஆனந்தியின் முதுகைப்பிடித்துக்கொண்டு வயல்வரப்பில் செல்கிறார். உடன் அனைவரும் செல்கின்றனர்.

பின், பம்பு செட்டில் வரும் நீரைப் பார்த்ததும் ஆனந்தி துள்ளிக் குதிக்கிறார். ஆனால், மித்ரா இந்தமாதிரியான அழுக்கு நீரில் எல்லாம் தன்னால் குளிக்கமுடியாது என வாதிடுகிறார். பின் உள்ளே பம்புசெட் இருக்கும் நீரில் வழுக்கி விழுந்துவிடுகிறார்.

முந்தைய எபிசோட்:

திருவிழாவிற்காக கிளம்பிய வேன் பாதி வழியில் நின்று போனது. அதனால் அனைவரும் இறங்கி வண்டியை தள்ளினார்கள். அப்போது மகேஷ், ‘’ஆனந்தியிடம் கிளட்ச்சை விட வேண்டாம். கொஞ்சம் தள்ளிய பிறகு விடச்சொல்லு’’ என சொல்லி அனுப்புகிறார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவரின் அண்ணன், ஆனந்தி வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து முழிக்கிறார்.

கவலை வேண்டாம்

வார்டன் மேடமிடம், மகேஷ், “ நீங்கள் எதையாவது மிஸ் செய்வது போல் உள்ளதா?’’ எனக் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர், ‘’பழைய நியாபகம்'' என சொல்ல, ‘’கவலை வேண்டாம். எல்லாமே சரியாகிவிடும் மேடம்'' என ஆறுதல் கூறினார்.

வில்லனின் செயல்

ஊர் திருவிழாவிற்கு வரும் ஆனந்திக்கு மாலை அணிவித்து வரவேற்கிறார்கள். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த வில்லன், ‘’ஆட்டம் ரொம்ப அதிகமாக இருக்கிறது.. அனைவரையும் சிதைத்துவிடுவோமா?'' எனக் கேட்டு சண்டைக்கு நிற்கிறார்.

மித்ரா மூலம் பிரச்னை

மிகவும் மகிழ்ச்சியாக வந்த ஆனந்திக்கு மித்ரா மூலம் ஒரு பக்கம் பிரச்னையும் மறுபக்கம் கிராமத்தில் இருக்கும் வில்லனால் என்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என்று பார்க்கலாம்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.