Singapenne: ‘லிப்டிற்குள் நடந்த கசமுசா.. ரோட்டில் வைத்து மானத்தை வாங்கிய ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!-sun tv singapenne serial nadagam latest today august 7 2024 episode promo - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne: ‘லிப்டிற்குள் நடந்த கசமுசா.. ரோட்டில் வைத்து மானத்தை வாங்கிய ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne: ‘லிப்டிற்குள் நடந்த கசமுசா.. ரோட்டில் வைத்து மானத்தை வாங்கிய ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 07, 2024 06:11 PM IST

Singapenne: நீ இந்த சமயத்தில் கண்டிப்பாக ஊருக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல மகிழ்ச்சி வெள்ளத்தில் பூரித்த ஆனந்தி அவருக்கு நன்றி கூறினார். - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne:  ‘லிப்டிற்குள் நடந்த கசமுசா.. ரோட்டில் வைத்து மானத்தை வாங்கிய ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne: ‘லிப்டிற்குள் நடந்த கசமுசா.. ரோட்டில் வைத்து மானத்தை வாங்கிய ஆனந்தி - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

இதற்கிடையே மித்ராவிடம் வந்த மகேஷ், அழகப்பன் சார் என்னை ஊர் திருவிழாவுக்கு வரச் சொல்லி இருக்கிறார் ஆனந்தியும் நானும் செல்ல இருக்கிறோம் என்று சொல்ல, அவள் கடுப்பாகிறாள். இது தெரியாமல், ஆனந்தி கருணாகரனிடம் சென்று திருவிழாவுக்கு செல்ல விடுமுறை கேட்டாள். ஆனால் கருணாகரனோ இவளுக்கு மட்டும் விடுமுறையே கொடுக்க மாட்டேன் என்று கறாராக சொல்லி விடுகிறார். அத்தோடு இன்றைய புரமோ முடிவடைகிறது.

சிங்க பெண்ணே சீரியலில் நேற்று ஆனந்தியும், அன்பும் ஸ்கெட்ச் போட்டு கருணாகரனையும், மித்ராவையும் லிப்ட்டிற்குள் அடைத்து வைத்தார்கள். இதையடுத்து அவர்கள், இரவு முழுக்க அதற்குள் கிடந்து அவதிப்பட்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் காலை லிப்டை திறக்கும் பொழுது, கருணாகரன் பனியனோடு கிடந்ததையும் மித்ரா நின்று கொண்டிருந்ததையும், பணியில் இருந்த அனைவரும் பார்த்து விட்டார்கள்.

இடையே வந்த மகேஷ்

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அங்கு மகேஷும் வந்துவிட, இதுதான் வாய்ப்பு என்று கூறி, அன்பும் ஆனந்தியும் மறைமுகமாக அவர்களை இணைத்து வைத்து பேசினார்கள். இதைப் பார்த்த கருணாகரன் என்ன செய்வது என்று தெரியாமல் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பேச ஆரம்பித்த மகேஷ், அன்று அன்பும் ஆனந்தியும் குடோனில் இருந்த போது, மித்ராவும் நீங்களும் அவர்களை இணைத்து வைத்து மிகவும் தவறாக பேசினீர்கள். ஆனால் இன்று அன்பும், ஆனந்தியும் உங்களை ஓய்வெடுக்க சொல்கிறார்கள். உண்மையில் பெரிய பதவியில் இருப்பதாலோ அல்லது நிறைய பணம் வைத்திருப்பதாலோ, ஒருவர் பெரிய ஆட்கள் ஆகிவிட முடியாது.

யார் ஒருவர் சொல்லாலும், செயலாலும் மற்றவர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என்று நினைக்கிறாரோ அவர்தான் உண்மையில் பெரிய ஆள் என்று சொல்லி அட்வைஸ் செய்தார். மேலும் ஆனந்தி, அரவிந்த் மித்ராவை கல்யாணம் செய்து கொள்பவர் என்று தெரிந்து, இந்த விஷயத்தை மிகவும் லாவகமாக கையாண்டதை பாராட்டியும் பேசினார்.

கருணாகரன் எரிச்சல் அடைந்தார்.

இதை பார்த்த கருணாகரன் எரிச்சல் அடைந்தார். இதையடுத்து இரண்டு பேருக்கும் விடுமுறை கொடுத்த மகேஷ், வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். ஆனால் கருணாகரன் மகேஷிடம், சார் நான் குளித்துவிட்டு மீண்டும் அலுவலகத்திற்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லி பைக்கை எடுத்து வெளியே கிளம்பினார்.

சிறிது தூரத்தில் ஆனந்தி கருணாகரனின் பைக்கை பஞ்சர் ஆக்குவதற்காக ஆணியை போட்டிருந்தாள். இதை பார்க்காத கருணாகரன், அதில் ஏற்றி வண்டியை பஞ்சர் ஆக்கிவிட்டார். ஏற்கனவே அலுவலகத்தில் நடந்த சம்பவத்தில் எரிச்சல் அடைந்திருந்த கருணாகரன், இந்த சம்பவத்தில் கிட்டத்தட்ட நொந்தே போய்விட்டார் என்று சொல்லலாம்.

இதையடுத்து யார் இதை செய்திருப்பார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஆனந்தி அங்கிருந்து என்ட்ரி கொடுத்தாள். நான் தான் செய்தேன் சார் என்று எகத்தாளமாக பேசினாள். இதற்கிடையே, ஆனந்தியின் வீட்டிலிருந்து கோயில் திருவிழாவுக்கு செவரக்கோட்டைக்கு வருமாறு அழைப்பு விடுக்க, ஆனந்தி எப்படி செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து அவளது நண்பிகள் நீ செல் என்பது ரீதியாக அட்வைஸ் செய்தார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.