Singappenne: ஆசையாக சென்ற ஆனந்தி.. திருவிழாவில் காத்திருக்கும் பெரிய பிரச்னை.. சிங்கப்பெண்ணே சீரியல்
Singappenne: வார்டன் மேடமிடம், மகேஷ், “ நீங்கள் எதையாவது மீஸ் செய்வது போல் உள்ளதா? என கேள்வி கேட்கிறார். அதற்கு அவர், பழைய நியாபகம் என சொல்ல, கவலை வேண்டாம் எல்லாமே சரியாகிவிடும் மேடம் “ என ஆறுதல் கூறினார்.
Singappenne: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய ( ஆகஸ்ட் 10 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இன்றைய ப்ரோமோ
திருவிழாவிற்காக கிளம்பிய இவர்களின் வேன் பாதி வழியில் நின்று போனது. அதனால் அனைவரும் இறங்கி வண்டியை தள்ளினார்கள். அப்போது மகேஷ், ஆனந்தியிடம் கிளட்ச் விட வேண்டாம், கொஞ்சம் தள்ளிய பிறகு விட சொல்லு என சொல்லி அனுப்புகிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத அவரின் அண்ணன், ஆனந்தி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து முழிக்கிறார்.
கவலை வேண்டாம்
வார்டன் மேடமிடம், மகேஷ், “ நீங்கள் எதையாவது மீஸ் செய்வது போல் உள்ளதா? என கேள்வி கேட்கிறார். அதற்கு அவர், பழைய நியாபகம் என சொல்ல, கவலை வேண்டாம் எல்லாமே சரியாகிவிடும் மேடம் “ என ஆறுதல் கூறினார்.
வில்லனின் செயல்
ஊர் திருவிழாவிற்கு வரும் ஆனந்திக்கு மாலை அணிவித்து கடுமையாக வரவேற்கிறார்கள். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த வில்லன், ஆட்டம் ரொம்ப அதிகமாக இருக்கிறது.. அனைவரையும் சிதைத்துவிடுவோமா? என கேட்டு சண்டைக்கு நிற்கிறார். அத்துடன் இன்றைய நாளிற்கான ப்ரோமோ முடிவுக்கு வந்தது.
மித்ரா மூலம் பிரச்னை
மிகவும் மகிழ்ச்சியாக வந்த ஆனந்திக்கு மித்ரா மூலம் ஒரு பக்கம் பிரச்சனையும் மறுபக்கம் கிராமத்தில் இருக்கும் வில்லனால் என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்று பார்க்கலாம்.
நேற்றைய எபிசோட்
நேற்றைய நாளின் எபிசோட்டில், ஆனந்தியின் அண்ணன் ஆக்டிங் டிரைவர் ஆக அழைத்த காரணத்தினால் யார் எவர் என்று கேட்காமல் பணிக்கு வந்தார். வந்து பார்த்தபோது ஆனந்தி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் தான் ஓட்டுனராக வரவில்லை என்று சொல்லி கிளம்பினார். பின்னர் அவருடன் இருக்கும் நபர் கட்டாயப்படுத்தி மாஸ்க் அணிந்து கொண்டு வருமாறு கூறினார்.
மித்ரா பேச்சால் கடுப்பு
அதைப் பார்த்து அன்பு நேரம் ஆகிவிட்டது வந்து வண்டியை எடுக்குமாறு கூறினார். தொடர்ந்து வண்டியில் போகும் போது அனைவரும் பேசி சிரித்து கொண்டு வந்தனர். அது மித்ராவிற்கு பிடிக்காமல் குழந்தைத்தனமாக எல்லாரும் நடந்து கொள்ளாதீர்கள் என்று முகத்தில் அடித்தபடி பேசினார்.
பாடல் பாடி நடனம்
இதனால் அந்த இடமே சற்று அமைதியானது. பின்னர் இரண்டு அணிகளாக பிரிந்து மீண்டும் அனைவரும் பாடல் பாடி நடனமாட ஆரம்பித்தார்கள். ஒரு பக்கம் அன்பு, ஆனந்தியை நினைத்து ரொமன்ஸ் செய்து பாடல் பாடி வருகிறார்.
ஏற்கனவே வில்லன் சிவரக்கோட்டையை விட்டு மீண்டும் ஆனந்தி செல்ல கூடாது என புது திட்டம் வைத்து இருக்கிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்