அன்பு வீட்டில் இருந்து வர மறுக்கும் ஆனந்தி.. கறார் காட்டும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
அன்பு வீட்டிலிருக்கும் ஆனந்தி உடனே புதிய ஹாஸ்டலில் சேர வேண்டும் என மகேஷ் உத்தரவிடுகிறார். ஆனால் இதனை ஆனந்தி ஏற்க மறுக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அன்பு தான் இத்தனை நாள் வரை அழகனாக கடிதம் எழுதி வந்து ஆனந்தியை காதலித்து வந்துள்ளது மகேஷிற்கு தெரியவந்துள்ளது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மித்ரா, அன்புவை நம்பி ஆனந்தியை இத்தனை நாள் அவர் வீட்டில் தங்கவைப்பதா என கேள்வி கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், ஆனந்தியை தங்க வைப்பதற்காக புதிய ஹாஸ்டலை தேடி கண்டுபிடித்துவிட்டார்.
புதிய ஹாஸ்டலுக்கு செல்ல வற்புறுத்தும் மகேஷ்
இதையடுத்து, ஆனந்தியை அழைத்த மகேஷ், இன்று மாலை புதிய ஹாஸ்டலுக்கு செல்ல வேண்டும் என கட்டளை இடுகிறார். ஆனால், ஆனந்தியோ அன்பு வீட்டிலிருந்து வர மறுப்பு தெரிவிக்கிறார். இத்தனை நாள் நான் அன்பு வீட்டில் தான் இருந்தேன். அப்போது அழைத்திருந்தால் நிச்சயம் வந்திருப்பேன். ஆனால், இப்போது வர முடியாது. அன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதாக கூறுகிறார். எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர் இந்த முடிவில் உறுதியாக இருக்கிறார் என ஆனந்தி வருத்தத்துடன் மகேஷிடம் கூறினார்.
ஆனந்தியிடம் கறார் காட்டிய மகேஷ்
இதனால், மகேஷ் சற்று அதிர்ச்சி அடைந்தாலும், அன்பு தனக்கு செய்த துரோகத்தை மறக்க முடியாமல் தவித்தார். இதனால், அது கோபமாக மாறி ஆனந்தியிடம் இன்றே ஹாஸ்டலுக்கு செல்ல வேண்டும் என கட்டளை இட்டுள்ளார்.
இதை அத்தனையையும் கேட்ட பின்பும் ஆனந்தி, மகேஷிடம் எப்படியாவது அன்பு வெளிநாடு போகமல் இருக்குமாறு அவரிடம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். இது குறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.
மித்ராவின் சதித்திட்டம்
மகேஷையும் அன்புவையும் பிரித்து மகேஷ் வாழ்க்கையில் இருந்து ஆனந்தியை நிரந்தரமாக தள்ளி வைக்க நினைத்த மித்ரா, அன்பு தான் அழகனாக இருக்க முடியும் என மகேஷிடம் தூண்டி விடுகிறார்.
அழகன் இந்த கார்மெண்ட்சில் வேலை செய்பவராகத் தான் இருக்க முடியும். ஏனென்றால், இங்குள்ளவர்களுக்குத் தான் ஆனந்தியைப் பற்றி அனைத்து தகவல்களும் தெரியும் என்றார் மித்ரா. அதற்கு மகேஷ் அப்படி எல்லாம் இருக்காது என மறுப்பு தெரிவித்த நிலையில், தன்னுடைய சதித் திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் மித்ரா, இங்குள்ளவர்களில் யாரும் அழகன் இல்லை என்றால் ஆனந்தியைப் பற்றிய அனைத்து விஷயங்களும் தெரிந்தவர் அன்பு தான். அப்போது, அன்பு ஏன் அழகனாக இரு்ககக் கூடாது என மகேஷ் மனதில் சந்தேகத்தை விதைக்கிறார்.
அன்புவின் கடிதம்
இதனால், செய்வதறியாது தவித்த மகேஷ், கார்மெண்ட்ஸ் குறித்து ஒரு கடிதம் எழுத்தித் தருமாறு அன்புவிடம் கூறியுள்ளார். அன்பு அதை எழுதி முடித்த உடன், அதைப் படிக்க ஆனந்தி ஆவலாக இருந்தார். ஆனால், இந்தக் கடிதத்தைப் படித்தால், அன்பு தான் அழகன் என்பதை அவர் கையெழுத்தை வைத்து கண்டு பிடித்துவிடுவார் என நினைத்து அன்பு கடிதத்தை தர மறுக்கிறார். இந்நிலைில், அன்புவின் கடிதம் மகேஷின் கைக்கு வர, அதிலிருக்கும் கையெழுத்தும் அழகனின் கையெழுத்தும் ஒத்துப் போகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்