கோர்த்துவிட்ட தங்கை.. மருதாணி வைத்துவிடும் அன்பு.. ஆனந்தி ரியாக்ஷன் என்ன தெரியுமா? சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
தன் தங்கையின் வற்புறுத்தலால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அன்பு ஆனந்தியின் கைக்கு மருதாணி வைத்து விடுகிறார். ஆனந்தியும் அதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.

ஹாஸ்டலில் இருந்து வெளியே அனுப்பப்பட்டது, வேலை செய்யும் இடத்தில் தீபாவளி போனஸ் பிரச்சனை, அன்புவின் அம்மாவிற்கு தெரியாமல் அவர்கள் வீட்டில் தங்கி இருப்பது என சிங்கப் பெண்ணே சீரியலில் ஆனந்தி வாழ்க்கையில் விதி சுற்றி சுற்றி அடிக்கிறது.
ஆனந்திக்காக போட்டி போடும் அன்பு, மகேஷ்
இருந்தாலும், அவரை பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற அன்புவும், மகேஷும் போட்டிப் போட்டுக் கொண்டு வந்துவிடுவர். அப்படித்தான், ஹாஸ்டலில் இருந்து வெளியேறிய ஆனந்தியை மகேஷ் பத்திரமாக அழைத்து வந்தார். பின், ஆனந்தியை அவர் வீட்டில் தங்க வைத்தால் நல்லதல்ல என நினைத்து, அன்புவின் வீட்டில் தங்க வைத்தார்.
ரொமானஸ் செய்யும் அன்பு- ஆனந்தி
அங்கு, வீட்டில் தனிாயாக இருந்த அன்புவிற்கு, ஆனந்தி மேல் மறைத்து வைத்திருந்த காதல் ஆங்காங்கே துளிர் விட்டது. அன்பு ஆனந்திக்காகவும், ஆனந்தி அன்புவிற்காகவும் சமைத்து கொடுப்பது, பாசமாக பார்த்துக் கொள்வது, ஆனந்திக்காக குடும்பத்தினரிடம் பொய் சொல்வது என அன்பு தன்னால் முடிந்த அத்தனையையும் ஆனந்திக்காக செய்கிறார்.