Singapennae Serial: அன்பு எடுத்த அதிரடி முடிவு.. கதறும் ஆனந்தி - மகேஷுக்கு இந்த விஷயம் தெரியுமா?-singapennae serial today episode promo on september 28 2024 indicates anbu sudden decision - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapennae Serial: அன்பு எடுத்த அதிரடி முடிவு.. கதறும் ஆனந்தி - மகேஷுக்கு இந்த விஷயம் தெரியுமா?

Singapennae Serial: அன்பு எடுத்த அதிரடி முடிவு.. கதறும் ஆனந்தி - மகேஷுக்கு இந்த விஷயம் தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Sep 28, 2024 08:10 AM IST

Singapennae Serial: ஆனந்தி, அன்புவிடம் சென்று, “ என்னை இதுவரை மன்னித்து ஏற்றுக் கொண்ட அன்புவா.. இப்போது என்னை விட்டு விலகி விலகி போகிறார் என கேள்வி கேட்கிறார்.

Singapennae Serial: அன்பு எடுத்த அதிரடி முடிவு.. கதறும் ஆனந்தி - மகேஷுக்கு இந்த விஷயம் தெரியுமா?
Singapennae Serial: அன்பு எடுத்த அதிரடி முடிவு.. கதறும் ஆனந்தி - மகேஷுக்கு இந்த விஷயம் தெரியுமா?

ஆனால் எப்படியோ அன்பு, வேலையை விட்டு செல்கிறார் என்று தெரிந்து கொண்டு, அனைவரும் அவருக்கு உணவை தங்கள் கையால் கொடுக்கிறார்கள். அப்போது மனதிற்குள் அன்பு, ” வாழ்க்கை முழுவதும் உன் கையால் சாப்பிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்படி பாதியில் நான் செல்லுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை ஆனந்தி “ என வருத்தப்பட்டார். 

அன்பு வேலையை விட்டு செல்வதால் அன்பு, ஜெயந்தி, முத்து உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுகிறார்கள்.

அன்பு எடுத்த அதிரடி முடிவு

இன்னொரு புரோமோவில் ஆனந்தி, அன்புவிடம் சென்று, “ என்னை இதுவரை மன்னித்து ஏற்றுக் கொண்ட அன்புவா.. இப்போது என்னை விட்டு விலகி விலகி போகிறார். என் மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு, என்னால இதை தாங்கி கொள்ளவே முடியல “ என கதறினார். 

இன்னொரு பக்கம் அன்புவை அழைத்த மகேஷ், ” ஆனந்தி மனதிற்குள் இருக்கும் அழகனை அழிக்க எதாவதது ஐடியா இருந்தால் சொல்லு “ என கேட்கிறார். அத்துடன் இன்றைய  ( அக் . 28 ) எபிசோட்டிற்கான புரோமோ முடிந்தது.

நேற்றைய எபிசோட்

அன்பு ,ஆனந்தியை விட்டு விலக வேண்டும் என்பதற்காக வேலையை விட முடிவெடுத்து இருந்தான். அதற்கான லெட்டரை, அவன் மித்ராவிடம் கொடுத்தான். இந்த செய்தியை கேட்ட அலுவலகத்தில் இருந்த அனைவரும், அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள்.

மித்ரா போட்ட கண்டிஷன்

ஏற்கனவே இன்றைய தினம், அழகன் யார் என்ற விஷயத்தை தன்னிடம் கண்டிப்பாக சொல்லவேண்டும் என்று ஆனந்தி அன்புக்கு கட்டளையிட்டு இருந்த நிலையில், அதை கேட்பதற்காக, அவள் அன்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த தருணத்தில், வேலையை பார்க்காமல் இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று கோபமடைந்த கருணாகரன், அவள் தலையில் கொட்டு வைத்தான். 

நோ சீன்

அன்பு நேராக சென்று மித்ராவிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத மித்ரா அன்புவிடம் எதனால் வேலையை விட்டு செல்கிறார் என விசாரித்தார். மேலும் யாருக்கும் சொல்லாமல் சீன் போடாமல் இந்த இடத்தை விட்டு போக வேண்டும் என்று மித்ரா சொல்கிறார்.

போக வேண்டாம் அன்பு

அதனைத் தொடர்ந்து அன்பு வந்த நிலையில், அனைவரும் அன்பை தயவு செய்து, எங்களை எல்லாம் விட்டுச் செல்லாதீர்கள் என்று கெஞ்சுகிறார்கள். ஆனந்தியும் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுது கொண்டிருக்கிறாள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.