Singappenne: காதலை சொன்ன அன்பு.. அப்ப மகேஷுக்கு அல்வா தானா? - சிங்கப் பெண்ணே சீரியல்!-singappenne serial today episode 7 september 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne: காதலை சொன்ன அன்பு.. அப்ப மகேஷுக்கு அல்வா தானா? - சிங்கப் பெண்ணே சீரியல்!

Singappenne: காதலை சொன்ன அன்பு.. அப்ப மகேஷுக்கு அல்வா தானா? - சிங்கப் பெண்ணே சீரியல்!

Aarthi Balaji HT Tamil
Sep 07, 2024 02:23 PM IST

Singappenne: அன்பு, ஆனந்தியிடம், " உங்கள் கண்களை மூடி பாருங்கள் யாருடைய முகம் வருகிறதோ அவர் தான் அழகன் " என விளையாட்டு விளையாடுகிறார். அதற்கு ஆனந்தி கண்ணை மூடினால் உங்கள் முகம் தான் வருகிறது என்று சொல்லுகிறார்.

Singappenne: காதலை சொன்ன அன்பு.. அப்ப மகேஷுக்கு அல்வா தானா? - சிங்கப் பெண்ணே சீரியல்
Singappenne: காதலை சொன்ன அன்பு.. அப்ப மகேஷுக்கு அல்வா தானா? - சிங்கப் பெண்ணே சீரியல்

இன்றைய எபிசோட்

அதில் நேற்று வார்டனை சந்தித்த மகேஷ் பசிக்கிறது என சொன்னவுடன், ராகி தோசை மற்றும் பிரண்டை சட்னி ஆகியவற்றை செய்து கொடுப்பார். அப்போ மகேஷ் உங்களுக்கு குடும்பம் என்று யாரும் இல்லையா என கேட்டவுடன் பேக்ரவுண்ட் மியூசிக் ஒலித்தது.

தற்போது மகேஷ், " நீங்கள் உங்கள் மகன் அல்லது மகளை மிகவும் மிஸ் செய்வது போல் எனக்கு தெரிகிறது " என்றார். வழக்கம்போல் அடுத்தவர்களை வட்டம் தட்டி பேசும் மித்ரா, இந்த முறை நண்பர்கள் என்று பார்க்காமல் கூட தனது இரண்டு சகோதரிகளை நாள் முழுவதும் வேலை செய்யாமல் தண்டமாக தான இருக்கிறார்கள் எனக்கு அடிமையாக சாடினார்.

அன்பு, ஆனந்தியிடம், " உங்கள் கண்களை மூடி பாருங்கள் யாருடைய முகம் வருகிறதோ அவர் தான் அழகன் " என விளையாட்டு விளையாடுகிறார். அதற்கு ஆனந்தி கண்ணை மூடினால் உங்கள் முகம் தான் வருகிறது என்று சொல்லுகிறார்.

காதலை சொன்ன அன்பு

கற்பனையில் உங்களுக்கு வந்தது செய்தான் ஆனந்தி என சொல்கிறார் அன்பு. இதன் மூலம் நீண்ட நாட்களாக தனது காதலை சொல்ல முடியாமல் தவித்த அன்பு ஒரு வழியாக ஆனந்தியிடம் காதலை சொல்லிவிட்டார்.

நேற்றைய எபிசோட்

சிங்கப் பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில், மகேஷ் வார்டனிடம் சென்று," நீங்க அன்னைக்கு எனக்கு கையில ஆயின்மென்ட் போட்டுவிட்டு டின்னர் ஊட்டி விட்டப்போ. ஒரு அஞ்சு வயசு பையன் போல எனக்கு இருந்துச்சு. அந்த பீல் ரொம்ப புதுசா இருந்துச்சு" என்றார்.

நகைகளை திரும்ப கொடு

ஆனந்தியின் அண்ணன் நகைகளை எடுத்துட்டு வந்த குற்ற உணர்வு காரணமாக தனது மனைவியிடம் சென்று, " ஆனந்தி இங்க சென்னையில் தான் இருக்கா. நீ போய் நகைகளை எடுத்துட்டு வா வாணி. நான் நகைகளை கொடுத்துட்டு அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வரேன் " என்றார்.

பரிசு கொடுத்த மகேஷ்

மறுபக்கம் ஹாஸ்டல் முன்பாக மகேஷ், ஆனந்தியை சந்திக்கிறார். ஆனந்தியிடம், " கிராமத்தில் இருக்கும் போது உனக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருந்தேன். அப்ப கொடுக்க முடியல இப்ப வாங்கிக்கோ " என்று சொல்லி ஒரு பரிசை கொடுக்கிறார்.

அதற்கு ஆனந்தி, " சொல்லி வைத்தது போல் இரண்டு பேருமே பரிசு கொடுக்கிறார்கள் " என யோசிக்கிறார். ஏற்கனவே மகேஷிற்கு முன்பாக இதேபோன்று ஒரு பரிசை அன்பு கொடுத்திருப்பார் போல. அதை தான் ஆனந்தி நினைத்து பார்க்கிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.