அழகனைக் காண அலைந்து திரியும் ஆனந்தி.. முடிவுகட்ட நினைக்கும் மகேஷ்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
ஆட்டோக்காரர் கொடுத்த தகவலை அடுத்து தான் காதலித்த அழகன் யார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆனந்தி மிகவும் போராடி வருகிறார்.

அன்பு வீட்டில் தங்கி இருக்கும் ஆனந்தி, வெளியே சென்று கொண்டிருக்கும் சமயத்தில், ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆனந்தியிடம் அழகன் குறித்து தகவல் கொடுப்பார். மேலும் அவர், அழகனை சில நாட்களுக்கு முன் பார்த்ததாக கூறுவார். இதனால் ஆனந்தி எப்படியாவது அழகனை கண்டுபிடிக்க வேண்டும் என நினைப்பார்.
தேடுதல் வேட்டையில் இறங்கிய ஆனந்தி
இந்நிலையில், அழகன் குறித்த தகவல் கிடைத்ததால் ஆனந்தியால் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவர் தொடர்பான இடங்களில் தேடி வருகிறார். இதை பற்றி எதுவும் தெரியாத அன்பு, ஆனந்தி வேலை செய்யும் கார்மெண்ட்லிற்கு சென்று ஆனந்தியைத் தடுக்க நினைக்கிறார். அப்போது தான் ஆனந்தி இன்று வேலைக்கே வரவில்லை என்பது அன்புவிற்கு தெரிந்தது.
அதற்குள்ளாக அழகன் குறித்த தகவல் மகேஷிற்கு கிடைக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த மகேஷ், அழகன் யாராக இருந்தாலும் சரி அவனை நான் நாளைக்குள் கண்டுபிடிப்பேன் என முடிவெடுத்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.