எனக்கு 25 உனக்கு 100.. அடித்து ஆடப்போகும் வெற்றிக் கூட்டணி.. சுதா கொங்கரா செய்யப் போகும் சம்பவம்..
நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படம் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் என்பது கூடுதல் ஸ்பெஷல்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் அமரன். தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளிவந்த இந்தத் திரைப்படம் மறைந்த ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று சிவகார்த்திகேயனுக்கு பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை மக்களிடம் பெற்றுக் கொடுத்தது. இதையடுத்து சினிமாவில் இவரது மார்க்கெட்டும் உயரத்திற்கு சென்றது.
சுதா கொங்கராவுடன் கைகோர்த்த எஸ்கே
அமரன் படத்தின் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடித்து வந்தார், இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சுதா கொங்கராவின் இயக்கத்தில் புறநானூறு எனும் படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியானது. இந்தப் படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்தததாகவும் அவர் படத்தில் இருந்து விலகியதால் இந்தப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட் ஆனதாகவும் தகவல் வெளியானது.
எஸ்கே 25 படப்பிடிப்பு தொடக்கம்
மேலும், சிவகார்த்திகேயனுடன் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, அதர்வா முரளி நடிப்பதாகவும், தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.