”நேற்று பெரிய தல இன்று குட்டி தல” வெனிஸ் நகரத்தில் வைப் செய்த ஷாலினி, குட்டி தல ஆத்விக்.. க்யூட் வீடியோ இதோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ”நேற்று பெரிய தல இன்று குட்டி தல” வெனிஸ் நகரத்தில் வைப் செய்த ஷாலினி, குட்டி தல ஆத்விக்.. க்யூட் வீடியோ இதோ!

”நேற்று பெரிய தல இன்று குட்டி தல” வெனிஸ் நகரத்தில் வைப் செய்த ஷாலினி, குட்டி தல ஆத்விக்.. க்யூட் வீடியோ இதோ!

Divya Sekar HT Tamil Published Oct 10, 2024 10:22 AM IST
Divya Sekar HT Tamil
Published Oct 10, 2024 10:22 AM IST

Shalini : ஷாலினி மீண்டும் தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில்,மகன் ஆத்விக்குடன் நடந்து செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

”நேற்று பெரிய தல இன்று குட்டி தல” வெனிஸ் நகரத்தில் வைப் செய்த ஷாலினி, குட்டி தல ஆத்விக்.. க்யூட் வீடியோ இதோ!
”நேற்று பெரிய தல இன்று குட்டி தல” வெனிஸ் நகரத்தில் வைப் செய்த ஷாலினி, குட்டி தல ஆத்விக்.. க்யூட் வீடியோ இதோ!

அஜித் வெனிஸ் நாட்டில் இருந்துதான் ஐரோப்பிய கார் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி எடுத்து வருகிறார். சமீபத்தில், ஷாலினி வெனிஸ் நகரத்தின் சாலையில் கணவர் அஜித்துடன் நடந்து செல்லும் வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

மகன் ஆத்விக்குடன் ஷாலினி

இந்நிலையில் ஷாலினி மீண்டும் தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில்,மகன் ஆத்விக்குடன் நடந்து செல்லும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மேலும், ‘வெனிஸ் சாலையில் சிறிய பாதங்கள்.. பெரிய சாகசங்கள்’ என பதிவிட்டிருக்கிறார்.

இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்த ரசிகர்கள், “நேற்று பெரிய தல இன்று சின்ன தல” ஆதவிக் பார்க்க வான்மதி அஜித் மாதிரி இருக்காரு” “இந்த வீடியோ பதிவிட்டதற்கு நன்றி சிஸ்டர்” என பதிவிட்டு வருகின்றனர்.

கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், அஜித். இவர் தனது மனைவி நடிகை ஷாலினியை காதலித்து கரம்பற்றி 25 ஆண்டுகளைத் தாண்டி வெற்றிகரமாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் இந்த நட்சத்திர ஜோடிக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் தனி மரியாதை உண்டு. புதிதாக காதலிப்பவர்கள் கூட, அஜித் - ஷாலினி போல், நமது காதலும் நிலைக்கவேண்டும் என நினைப்பது உண்டு. இந்நிலையில் நடிகர் அஜித் குமாரும், ஷாலினியும் காதலிக்கத் தொடங்கி 25ஆண்டுகளை நிறைவுசெய்ததைக் கூட, தங்களது நண்பர்களோடு சேர்ந்து சமீபத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

அஜித் - ஷாலினி காதல் கதை

நடிகர் அஜித், சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ஷாலினியுடன் ஜோடியாக நடித்த படம்தான், அமர்க்களம். இப்படத்தில் ஒரு காட்சியில் அஜித், தன் கையில் கத்தியை வைத்து அறுக்க முயற்சிக்கையில், அது உண்மையிலேயே அறுத்துவிட்டதாம். இதனால், பதறிப்போன, ஷாலினி, அவரை நன்கு பார்த்துக்கொண்டாராம். இதில் இம்ப்ரஸ் ஆன அஜித், ஷாலினியிடம் தன் காதலைச் சொல்ல, படப்பிடிப்புத் தளத்திலேயே ஓகே சொல்லியிருக்கிறார்.

மேலும்,1999ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்த நாள் பரிசாக எண்ணற்ற பரிசுப்பொருட்களை, இயக்குநர் சரண் மூலம் அஜித்திடம் கொண்டு சேர்த்திருக்கிறார், ஷாலினி. இதனால் நெகிழ்ந்துபோன அஜித் தனது காதல் குறித்து, தன் பெற்றோரிடமும் அஜித்தின் பெற்றோரிடமும் பேசி, திருமணம் செய்துகொள்ள சம்மதம் பெற்றுள்ளார். அப்போது அஜித் பெரிய நடிகராக இல்லையென்றாலும், மகள் மீது வைத்த நம்பிக்கை காரணமாக, ஷாலினியின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார், ஷாலினியின் தந்தை.

அஜித் - ஷாலினி திருமணம்

அதன்பின் ஏப்ரல் 24, 2000ஆம் ஆண்டு, சென்னையில் வைத்து அஜித் - ஷாலினி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தில் முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன் வளர்ப்பு மகன்போல் அஜித்தின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின், சினிமாவில் இருந்து விலகி, குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆர்வம் காட்டினார், ஷாலினி.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.