‘ச்சை.. அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா.. முழுக்க ஆபாசம்..’: கபில் சர்மா ஷோவை வறுத்தெடுத்த சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா
‘ச்சை.. அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா.. முழுக்க ஆபாசம்..’: கபில் சர்மா ஷோவை வறுத்தெடுத்த சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணாவின் பேட்டி வைரல் ஆகியுள்ளது.
‘ச்சை அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா.. முழுக்க ஆபாசம்..’: கபில் சர்மா ஷோவை வறுத்தெடுத்த சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணாவின் பேட்டி வைரல் ஆகி வருகிறது.
இந்தியில் பிரபல நிகழ்ச்சியாக அறியப்படுவது, தி கபில் சர்மா ஷோ என்னும் இன்டர்வியூ போன்ற கலகலப்பான நிகழ்ச்சியாகும். அண்மையில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கூட இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கு எடுத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் கபில் சர்மா தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் அவரது ஷோ குறித்து சக்திமான் நடிகர் முகேஷ் கண்ணா திட்டி பேட்டியளித்துள்ளார்.
டிடி- சேனலில் வெளியான சக்திமான் தொடரின் மூலம் தமிழ்நாட்டில் இருக்கும் 90ஸ் கிட்ஸ்கள் பலருக்கும் பரீட்சயம் ஆனவர், நடிகர் முகேஷ் கண்ணா. அதேபோல், மகாபாரதம் சீரியலிலும் நடித்து நடிப்புத்துறையில் வித்தியாசமான அடையாளத்தை உருவாக்கினார்.
இந்நிலையில் அடிக்கடி வெளிப்படையாக கருத்துகளைப் பேசி வருவதால், சமீப காலமாக செய்திகளில் இடம்பெற்று வருகிறார். அப்படி ஒரு சம்பவம் குறித்து, இந்தியில் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி குறித்து, முகேஷ் கண்ணா கடுமையாக விமர்சித்தார்.
அதே நேரத்தில், கபில் சர்மாவின் நகைச்சுவை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஏன் மாறவில்லை என்பதையும் முகேஷ் கண்ணா கூறினார்.
கபில் சர்மாவின் நகைச்சுவை நிகழ்ச்சியில் பங்கு எடுக்காதது குறித்து சக்திமான் நடிகர் பேட்டி:
முதலில் ’கபில் சர்மா ஷோ’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் தன்னை நிகழ்ச்சிக்கு அணுகவில்லை என்றும்; அவ்வாறு அவர்கள் செய்தாலும், அதை அவர் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
முகேஷ் கண்ணா சமீபத்தில் சித்தார்த் கனனுக்கு ‘முஜே நஹி கால்’ நிகழ்ச்சியின்போது அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "தி கபில் சர்மா ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி, என்னை ஒருபோதும் யாரும் தொடர்பு கொள்ளவில்லை.
அவர்களின் பிரச்னை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஒருமுறை நடிகர் கூஃபி பெயிண்டல் எனக்கு போன் செய்து அழைத்து, கபில் ஷோவுக்கு, ராமாயண நடிகர்களை அழைத்துள்ளார். ஒருவேளை அவர் நம்மையும் அழைப்பார் என்று கூறினார். கபில் சர்மா, மகாபாரத நடிகர்களை அழைத்தார். ஆனால், அவர்கள் என்னை அழைக்கவில்லை.
நான் இந்த நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன். அவரது நிகழ்ச்சியில் ஆபாசம் தெரிகிறது. கபில் சர்மாவின் வசனங்களும் பெரும்பாலும் இரட்டை அர்த்த வசனங்களாகவே இருக்கும். நிகழ்ச்சியில் கண்ணியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் நான் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கமாட்டேன் என்று நடிகர் கூஃபியிடம் சொன்னேன்.
ராமர் நடிகருக்கு கிடைத்த அவமானம்:
மேலும், நடிகர் அருண் கோவில்(ராமாயணம் சீரியலில் ராமராக நடித்தவர்) மற்றும் படக்குழுவினர் அமர்ந்திருந்த கபில் ஷோ ப்ரோமோவை பார்த்தேன். இந்நிலையில் கபில் சர்மா அருண் கோவிலிடம் ஒரு கேள்வியை கேட்கிறார். சார், ’’நீங்கள் கடற்கரையில் குளிக்கிறீர்கள், அப்போது அங்குள்ள மக்கள் கூட்டம் கூச்சலிடத் தொடங்குகிறார்கள். அது ஏனென்றால், ராம் கதாபாத்திரத்தில் நடித்த நீங்கள் விஐபி உள்ளாடைகளையும் அணிந்துள்ளது பற்றி’’கபில் சர்மா பேசுகிறார்.
அருண் இது குறித்து எதுவும் பேசாமல் புன்னகைத்து விட்டு அமைதியாக அமர்ந்திருந்தான். ஆனால், நான் இருந்திருந்தால் அதை சகித்துக் கொண்டிருக்கமாட்டேன். நடிகர் அருண் கோவிலின் இமேஜ் மிகவும் பெரியது. நீங்கள் அவரிடம் இவ்வளவு மலிவான கேள்வியைக் கேட்கிறீர்கள்.
ராமனைப் பாராட்டாதவன் எப்படி, பீஷ்மரிடம் மரியாதை கொள்வான். அந்த நேரத்தில், நான் இனி இந்த நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டேன் என்று முடிவு செய்திருந்தேன்’’ என்றார், நடிகர் முகேஷ் கண்ணா.
இந்த நேர்காணலில், முகேஷ் கண்ணா கபில் சர்மாவுடனான தனது முதல் சந்திப்பின் கதையையும் பகிர்ந்து கொண்டார். அதுகுறித்து அவர் கூறுகையில்,'’ கபிலும் நானும் ஒரு விருது விழாவில் சந்தித்தோம். அங்கு அவர் என்னை புறக்கணித்தார். அவர் 10 நிமிடங்கள் என் அருகில் அமர்ந்திருந்தார். ஆனால் அவர் ஹலோ கூட சொல்லவில்லை. நீங்கள் வணக்கம் சொல்வதை நான் விரும்பவில்லை. ஆனால், உங்களுக்கு அந்த பண்பு இல்லை என்று நான் சொல்கிறேன். நான் அமிதாப் பச்சனை சந்திக்கும் போதெல்லாம், அவருடன் பணியாற்றவில்லை என்றாலும், நான் சந்திக்கும் போதெல்லாம், அவரது நல்வாழ்வு குறித்து எப்போதும் அவரிடம் கேட்பேன். கபில் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர். ஆனால் அவருக்கு நிறைய ஈகோ உள்ளது’’என வெளிப்படையாக உடைத்துப் பேசினார், நடிகர் முகேஷ் கண்ணா.