Shaktimaan: 300 கோடி பட்ஜெட்டில் உலகத் தரத்தில் தயாராகும் சக்திமான் - நடிகர் முகேஷ் கண்ணா
300 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் சக்திமான் திரைப்படம் உருவாக உள்ளதாக நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

சக்திமான் திரைப்படம்
தற்போது பல சூப்பர் ஹீரோக்கள் தொடர்களாகவும், படங்களாகவும் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது உள்ள இளைஞர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்றார் போலப் பல சூப்பர் ஹீரோக்கள் உள்ளனர். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை முதல் சூப்பர் ஹீரோ சக்திமான் தான்.
90களில் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோ என்றால் அது சக்திமான் தான். டிடி சேனலில் வெளியிடப்பட்ட முதல் சூப்பர் ஹீரோ தொடர் இந்த சக்திமான். மிகப்பெரிய ஹிட் அடித்த தொடர்களில் இதுவும் ஒன்று. இன்றுவரை 90களில் பிறந்தவர்களுக்கு சூப்பர் ஹீரோ இவர் தான்.
தற்போது சக்திமான் தொடர் 200 கோடி ரூபாய் முதல் 300 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டு திரைப்படமாக உருவாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அந்த தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.