Ranbir Kapoor Salary: ராமாயணம் படத்துக்கு ரன்பீர் கபூரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சாய் பல்லவியை விட 12 மடங்கு!
- Ranbir Kapoor Salary: ராமாயணம் படத்துக்கு ரன்பீர் கபூரின் சம்பளம் மற்றும் யாஷின் சம்பளம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
- Ranbir Kapoor Salary: ராமாயணம் படத்துக்கு ரன்பீர் கபூரின் சம்பளம் மற்றும் யாஷின் சம்பளம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
(1 / 6)
நிதிஷ் திவாரி இயக்கி வரும் வரலாற்றுப் படமான 'ராமாயணம்' திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் ஆகியோர் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டதிலிருந்து இப்படம் ட்ரெண்டிங்கில் உள்ளது. ராமர் கதாபாத்திரத்திற்கு ரன்பீர் கபூர் நடிப்பார் என்றும்; ராவணன் கதாபாத்திரத்திற்கு யாஷ் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஒவ்வொரு நடிகரும் பெரிய நட்சத்திரம் ஆகவுள்ளனர். இந்த படத்திற்கு முக்கிய நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளனர் என்பதை தெரிந்து கொள்வோம்.
(2 / 6)
இப்படத்தில் சீதையாக நடித்திருக்கும் தென்னிந்திய முன்னணி நடிகை சாய் பல்லவியில் இருந்து இந்த லிஸ்டினை ஆரம்பிக்கலாம். தற்போது தனது தோற்றம் மற்றும் உற்சாகமான நடிப்பு திறமைக்கு பெயர் பெற்ற சாய் பல்லவி, தனது முந்தைய படங்களுக்கு ரூ .2.5-3 கோடி வசூலித்து வந்தார். ராமாயணத்தில் சீதையாக நடிக்க சாய் பல்லவிக்கு ரூ.6 கோடி சம்பளம் வழங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
(3 / 6)
ரன்பீர் கபூர் 'ராமாயணம்' படத்துக்காக அதிக சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ராமராக நடிக்கும் நடிகர் ரன்பீர் கபூரின் சம்பளம் குறித்து விசாரிக்கும்போது, அவர் சாய் பல்லவியை விட 12 மடங்கு அதிகமாக சம்பளம் பெறுகிறார். ரன்பீர் கபூர் இந்த மெகா படத்திற்கு ரூ .75 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது, இது சாய் பல்லவியை விட அதிகம்.
(4 / 6)
இப்படத்தில் ராவணனாக நடிக்கும் நடிகர் யாஷூக்கு தனது தோற்றம் மற்றும் மாஸான நடிப்புக்காக ரூ.50 கோடி சம்பளம் தரப்படுகிறது.
(5 / 6)
நிதிஷ் திவாரியின் ராமாயணத்துக்காக அயோத்தியில் ரூ.11 கோடி செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, இந்த புள்ளிவிவரங்களில் பெரும்பாலானவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் ஊடக அறிக்கைகளின்படி, படம் மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மற்ற கேலரிக்கள்