Top Trending Songs: தி கோட் படத்தின் ஸ்பார்க், விசில் போடு..டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் விஜய் பாடல்கள் லிஸ்ட்
Top Trending Vijay Songs: தி கோட் படத்தின் ஸ்பார்க், விசில் போடு உள்பட டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் விஜய் பாடல்கள் லிஸ்ட்டை பார்க்கலாம்.
தளபதி விஜய் அரசியில் என்ட்ரிக்கு பிறகு உருவாகியிருக்கும் தி கோட் படம் இன்று வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் தி கோட் திரைப்படம் கேரளா உள்பட சில பகுதிகளில் அதிகாலை காட்சியே திரையிடப்பட்டது. படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளிவர தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் தி கோட் திரைப்படம் முதல் காட்சி 9 மணிக்கு ஆரம்பிக்கிறது.
இதையடுத்தி தி கோட் உள்பட தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல்கள் பல ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் விஜய்யின் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்.
ஸ்பார்க்
தளபதி விஜய் நடிப்பில் வரும் வியாழக்கிழமை வெளியாக இருக்கும் தி கோட் படத்தில் இடம்பிடித்திருக்கும் ஸ்பார்க் பாடலுக்கு கங்கை அமரன் பாடல் வரிகள் எழுத யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா, விருஷா பாலு ஆகியோர் பாடியுள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பு இந்த பாடல் தற்போது ட்ரெண்ட ஆக தொடங்கியுள்ளது.
விசில் போடு
கோட் படத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு பாடலாக விசில் போடு உள்ளது. தி கோட் படத்தின் முதல் சிங்கிளாக வெளியான இந்த பாடலில் விஜய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் நடனமாடியுள்ளனர். தற்போது லிரிக் விடியோ வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், திரையில் காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் உள்ளார்கள்.
சின்ன சின்ன கண்கள்
தளபதி விஜய் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் தி கோட் படத்தில் டாப் 10 பாடல்கள் லிஸ்டில் மூன்றாவது பாடலாக இது இடம்பிடித்துள்ளது. கபிலன் வைரமுத்து பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தளபதி விஜய், யுவன் ஷங்கர் ராஜா, மறைந்த பாடகி பவதாரணி ஆகியோர் பாடலை பாடியுள்ளனர்.
ஜிம்க்கி பொன்னு
கடந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான வாரிசு படத்தில் இடம்பிடித்திருக்கும் ஜிமிக்க பொன்னு பாடல் இப்போது வரை ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விவேக் பாடல் வரிகள் எழுத தமன் இசையமைத்திருக்கும் இந்த பாடலை அனிருத், ஜோனிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். பெப்பியான மெலடி பாடலாக ஜிமிக்கி பொன்னும் ரசிகர்கள் கவர்ந்து வருகிறது.
தீ தளபதி
வாரிசு படத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு பாடலாக தீ தளபதி உள்ளது. இந்த படம் ரிலீஸுக்கு முன் இரண்டாவது சிங்கிளாக வெளியான இந்த பாடலை விவேக் எழுத, தமன் இசையமைப்பில் சிம்பு பாடியுள்ளார்.
ரஞ்சிதமே
வாரிசு படத்தில் மூன்றாவது பாடலாக ரஞ்சிதமே இருக்கிறது. விவேக் பாடல் வரிகளில் தளபதி விஜய், மான்ஸி பாடியிருக்கும் இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்த பாடலாக உள்ளது. இப்போது வரையிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
மதுரைக்கு போகாதடி
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் நடித்திருக்கும் அழகிய தமிழ்மகன் படத்தில் இடம்பிடித்திருக்கும் ஃபோக் பாடலாக அமைந்துள்ளது. பா. விஜய் எழுதிய இந்த பாடல் பென்னி டயால், அர்ஷித், தர்ஷனா கேடி ஆகியோர் பாடியுள்ளனர்
வா தலைவா
வாரிசு படத்தில் இடம்பெறும் இண்ட்ரோ பாடலாக வா தலைவா அமைந்துள்ளது. விவேக் எழுதியிருக்கும் இந்த பாடல் ஷங்கர் மகாதேவன், கார்த்திக், தமன், தீபக் ப்ளூ, அரவிந்த் சீனிவாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.
அஸ்க லஸ்கா
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் இந்த பாடல் இடம்பிடித்துள்ளது. மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடலை விஜய் பிரகாஷ், சின்மயி, சுவி ஆகியோர் பாடியுள்ளனர். 2012இல் நண்பன் படம் வெளியாகியிருக்கும் நிலையில், தற்போது வரை இந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது
டாடி மம்மி
பிரபு தேவா இயக்கித்தில் விஜய் நடித்த வில்லு படத்தில் இடம்பிடித்திருக்கும் இந்த பாடல் தமிழ்நாடு முழுவதும் ட்ரெண்ட் ஆனது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் நடிகை மம்தா மோகன்தாஸ், நவீன் மாதவ் ஆகியோர் இந்த பாடல் பாடியுள்ளனர்
கூகுள் கூகுள்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் சூப்பர் ஹிட் படமான துப்பாக்கி படத்தில் இடம்பிடித்திருக்கும் பெப்பி பாடலாக கூகுள் கூகுள் உள்ளது. மதன் கார்க்கி எழுதியிருக்கும் இந்த பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் இசை தளபதி விஜய், நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் பாடியுள்ளனர்
வரலாம் வா
விஜய்யின் பைரவா படத்தில் இடம்பிடித்திருக்கும் தெறிக்கவிடும் பாடலாக வரலாம் வா உள்ளது. ரோஷன் ஜாம்ராக், அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகள் எழுதி, பாட சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த பாடல் அதிரடியான தெறிக்கவிடும் பாடலாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்