தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil: இது என்ன புது டுவிஸ்ட்.. சீரியலுக்கு குட் பை சொல்லி பிக் பாஸ் செல்லும் நடிகை?

Bigg Boss 7 Tamil: இது என்ன புது டுவிஸ்ட்.. சீரியலுக்கு குட் பை சொல்லி பிக் பாஸ் செல்லும் நடிகை?

Aarthi V HT Tamil
Sep 25, 2023 10:35 AM IST

சன் டிவி சீரியல் நடிகை நிவிஷா பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் 7
பிக் பாஸ் 7

ட்ரெண்டிங் செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரு வீட்டாரை எப்படி கையாளப் போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இது தவிர பிக் பாஸ் வீட்டில் ஆண் குரல் மட்டுமே ஒலித்து வரும் நிலையில், இந்த சீசனில் லேடி பிக் பாஸ் குரலும் ஒலிக்கும் என்று கூறப்படுகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கசிந்து வருகிறது. நடிகர் அப்பாஸ், பப்லு பிருத்விராஜ், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரன், ரவீனாவுடன் விஜய் டிவி சீரியல் நடிகர் விஷ்ணு, நடிகை ரச்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர், நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை சோனியா அகர்வால் ஆகியோரின் பெயர் அடிப்பட்டு இருக்கிறது.

இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் மலர் சீரியல் நடிகை நிவிஷா. விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்தார். அதன் பிறகு, சன் டிவிக்கு மாறிய அவர், சமீபத்தில் தொடங்கப்பட்ட மலர் என்ற சீரியலில் நடித்தார்.

நிவிஷா சமீபத்தில் தான் மலர் சீரியலில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நிவிஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ள இருக்கிறதாம். அதை அவரும் ஏற்று கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்