புலம்பும் பாக்கியலட்சுமி ஜெனி.. இப்படியா பண்ணுவீங்க.. இத்தோட நிறுத்திக்கோங்க.. எச்சரிக்கும் நடிகை!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாப்பாத்திரத்தில் நடித்துவரும் திவ்யா கணேஷ் தன்னை சுற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

ரியாலிட்டி ஷோக்களுக்கு இணையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் ஏராளம். குடும்பக் கதை, காதல் கதை, பெண்ணின் முன்னேற்றம், கல்லூரி காதல் என பல வெரைட்டிகளில் சீரியல்களை தயாரித்து அதனை ஒளிபரப்பி வருகிறது.
பிரைம் டைம் சீரியல்
அந்த வகையில், டிஆர்பிக்காக பல வேலைகளை செய்துவரும் விஜய் டிவி, தனது பிரைம் டைம் சீரியல்கள் குறித்தும், ரியாலிட்டி ஷோக்கள் குறித்தும் பெரும் மெனக்கெடல்களை செய்து வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் பல ஆண்டாக இடம் பிடித்து வந்தது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் நடிகை குறித்து சில நாட்களாக சில வதந்திகள் பரவி வருகிறது.
பரவிய வதந்தி
இந்த சீரியலில் ஜெனியாக நடித்துவரும் திவ்யா கணேஷ், அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விகாஷ் சம்பத்தை காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது. இதுதொடர்பாக பல செய்திகளும், வீடியோக்களும் வெளியான நிலையில் இதுகுறித்து நடிகை திவ்யா கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கமளித்துள்ளார்.