Ritika : என்னை யாரும் தடுக்க வில்லை.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த ரித்திகா!-actress ritika revealed the reason behind her exit from the bakiyalakshmi serial - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ritika : என்னை யாரும் தடுக்க வில்லை.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த ரித்திகா!

Ritika : என்னை யாரும் தடுக்க வில்லை.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த ரித்திகா!

Divya Sekar HT Tamil
Sep 13, 2024 07:58 AM IST

Actress Ritika : திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை நடிகை ரித்திகா கூறினார். நேர்காணல் ஒன்றில் சமீபத்தில் பேசிய ரித்திகா திருமணத்திற்கு பிறகு நான் நடிக்க வேண்டும் என்றுதான் இருந்தேன், என்னை யாரும் தடுக்கவும் இல்லை என்று கூறினார்.

Ritika : என்னை யாரும் தடுக்க வில்லை.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த ரித்திகா!
Ritika : என்னை யாரும் தடுக்க வில்லை.. பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த ரித்திகா!

சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘ராஜா ராணி’ சீரியலில் வினோதினி என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ரித்திகா. தொடர்ந்து ‘சிவா மனசுல சக்தி’ ‘சாக்லேட்’ ‘திருமகள்’ உள்ளிட்ட சீரியல்களில் இவர் நடித்தார். அதனைத்தொடர்ந்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் இவருடன் கோமாளியாக கலந்து கொண்ட பாலாவை இவர் காதலிப்பதாக கூறி தகவல்கள் வெளியாகின. அதனைத்தொடர்ந்து அதற்கு இவர் வீடியோ வாயிலாக விளக்கமளிக்க, அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.

அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு

அதனைத்தொடர்ந்து ரித்திகாவிற்கு விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.பின்னர் இந்த சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

பாக்கியலட்சுமி சீரியலில் இவருடைய கேரக்டர், காதலித்து திருமணம் செய்த கணவர் தன் கண்முன்னே இறந்து போய்விட பிறகு தன்னுடைய குழந்தையோடு கணவரின் பெற்றோரோடு ரித்திகா வாழ்கிறார்.  பிறகு எழிலை காதலித்து இருப்பார். பல போராட்டங்களுக்குப் பிறகு பாக்யா முயற்சியால் எழில் மற்றும் அமிர்தாவுக்கு திருமணமும் நடைபெற்றது.

ரித்திகாவிற்கு திருமணம்

திருமணத்திற்கு பிறகு அமிர்தா பாக்யாவிற்கு பக்கபலமாக இருந்து வந்தார். அந்த நேரத்தில் தான் ரித்திகாவிற்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். பிறகு எதிலும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது கர்ப்பமாக இருக்கும் ரித்திகா தனது வளைகாப்பு தொடர்பான புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்தார். நிறைமாத கர்ப்பமாக இருக்கும் ரித்திகா தான் எதற்காக சீரியல் விட்டு விலகினேன் என்று கூறியிருக்கிறார்.

நான் கர்ப்பமாக இருந்தேன்

அவர் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், ”நான் திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். நான் நடிக்க கூடாது என்று என்னுடைய கணவரோ, என் கணவர் வீட்டிலோ யாரும் சொல்லவில்லை. ஆனால் எனக்கு உடல் நிலையில் சில பிரச்சனைகள் வந்தது. அதனால் தான் நான் நடிப்பை விட்டு விலகி இருந்தேன்.

அந்த நேரத்தில் சில மாதங்கள் கழித்து நான் கர்ப்பமாக இருந்தேன். இது கடவுள் கொடுத்த வரம் என்பதால் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இந்த வாழ்க்கைக்கு தயாராகி விட்டேன். குழந்தை பிறந்து ஓரளவிற்கு செட்டில் ஆனதும் மீண்டும் நடிக்க தொடங்குவேன். உடல்நிலை பிரச்சனை காரணமாகத்தான் நான் சீரியலை விட்டு விலகினேன்” என்று ரித்திகா கூறியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.