தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: ராம், மது இடையே ஏற்படும் நெருக்கம்..சீதா கண்ட அதிர்ச்சி!

Seetha Raman: ராம், மது இடையே ஏற்படும் நெருக்கம்..சீதா கண்ட அதிர்ச்சி!

Aarthi V HT Tamil
Jun 13, 2023 11:19 AM IST

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகாவின் பேச்சை கேட்டு மதுமிதா சூர்யாவுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை கிழித்து போட்ட நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது மதுமிதா போட்டோவை கிழித்து போட்டதை பார்த்து மகா சந்தோசப்பட வீட்டில் சீதா உப்பு, காரம் எல்லாம் அதிகம் போட்டு ஒரு பெரிய கேரியரில் சாப்பாடு கட்டி கொண்டு ஆபிஸ் கிளம்பி வர செக்யூரிட்டியும் இவ்வளவு பெரிய கேரியரை எப்படி கொண்டு போவீங்க என உதவிக்கு வருகிறான்.

இதையடுத்து ஆபிசில் ராமின் தங்கைகள் மதுமிதாவுக்கு மெகந்தி போட்டு விட ராம் அப்படியே அவளுக்கு கணக்கு வழக்குகளை சொல்லி கொடுக்கிறான், அதன் பிறகு சீதா ஆபிஸ் வருவதை cctv கேமராவில் பார்த்த மகா செக்யூரிட்டியிடம் அவ ஒரு பைத்தியம் அவளை உள்ள விடாதே என்று சொல்ல செக்யூரிட்டியும் சீதாவை தடுத்து நிறுத்த சீதா அதை மீறி உள்ளே நுழைகிறாள்.

இதை பார்த்த துரை சீதாவை நேராக பூஜையறைக்கு அழைத்து செல்ல அங்கு மது சூர்யா ஒன்றாக இருக்கும் போட்டோ கிழித்து போடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். பிறகு அங்கு வரும் மகா செக்யூரிட்டியை அழைத்து சீதாவை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைக்கிறாள்.

பிறகு சீதா மீண்டும் செக்யூரிட்டிக்கு ஐஸ் வைத்து ஆபிஸ்குள் நுழைய மகா ஓட்டலில் இருந்து சாப்பாட்டை வர வைத்து இருக்க மதுமிதா கையில் மெஹந்தி போட்டு இருந்ததால் ராம் அவளுக்கு ஸ்பூனில் ஊட்டி விடுகிறான், இதை நேரில் பார்த்த சீதா கலங்கி போய் நிற்க மகா இனியும் உனக்கு ராம் வேணுமானு யோசி, ஒழுங்கு மரியாதையா ஓடி போய்டு என மிரட்டுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்