தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: வாந்தி எடுக்கும் சீதா, மகாவுக்கு ராம் கொடுத்த அதிர்ச்சி

Seetha Raman: வாந்தி எடுக்கும் சீதா, மகாவுக்கு ராம் கொடுத்த அதிர்ச்சி

Aarthi V HT Tamil
May 17, 2023 01:35 PM IST

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ராம் சீதாவுக்கு குல்பி வாங்கி வந்து கொடுத்த நிலையில் சீதா ராமுக்காக தைத்த போலீஸ் ட்ரெஸ்ஸை எடுத்து கொடுத்து சர்ப்ரைஸ் செய்கிறாள்.

இதையடுத்து ராம் போலீஸ் டிரஸ் போட்டு இங்கும் அங்கும் நடந்து காட்ட அந்த சமயம் ராமின் மாமா துரை இதை பார்த்து விட்டு பயந்து ஓட சீதா இதை பார்த்து சிரிக்கிறாள். மறுநாள் காலையில் சீதா சாப்பிட்ட குல்பி செட்டாகாமல் வாந்தி எடுக்க இதை பார்த்த மகா அதிர்ச்சி அடைகிறாள். சீதா ராமின் குழந்தையை வயிற்றில் வச்சிட்டு வாந்தி எடுப்பேன் என ஏற்கனவே விட்ட சவால் அவளுக்கு ஞாபகம் வர மகாவுக்கு டென்ஷன் இன்னும் அதிகமாகிறது.

பிறகு சீதாவிடம் வந்து என்னாச்சு என கேட்க அவள் சாதாரணமாக உங்க பையன் கிட்டயே கேளுங்க என்று சொல்ல மகாவுக்கு டென்ஷன் இன்னும் அதிகமாகிறது. பிறகு ராமிடம் சென்று என்னாச்சு என கேட்க அவனும் குல்பியை மனதில் வைத்து கொண்டு நான் தான் காரணம் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதன் பிறகு மீரா வந்து நீ பெரிய ஆள் தான், சொன்ன மாதிரியே செஞ்சிட்ட என சொல்லி சந்தோஷப்பட சீதா இது குல்பியால் வந்த வாந்தி என்ற உண்மையை சொல்கிறாள். மேலும் டாக்டர் வீட்டுக்கு வந்து சீதாவை பரிசோதனை செய்ய மகாவுக்கு பீபி அதிகமாகி கொண்டே இருக்கிறது.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்