Today Movies : சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா முதல் திகில் படம் யு டர்ன் வரை இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!-seemaraja and u turn and moodar koodam here is the list of films released today 13 sep 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Today Movies : சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா முதல் திகில் படம் யு டர்ன் வரை இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

Today Movies : சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா முதல் திகில் படம் யு டர்ன் வரை இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

Divya Sekar HT Tamil
Sep 13, 2024 10:43 AM IST

Today Tamil Movies : சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் வெளியான சீமராஜா, சமந்தா மற்றும் ஆதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த யு டர்ன் என இன்றைய நாளில் வெளியான படங்கள் குறித்துப் பார்க்கலாம்.

Today Movies : சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா முதல் திகில் படம் யு டர்ன் வரை இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!
Today Movies : சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா முதல் திகில் படம் யு டர்ன் வரை இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்ட் இதோ!

யு டர்ன்

யு டர்ன் என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் திகில் திரைப்படம். இத்திரைப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை பவன் குமார் எழுதி, இயக்கி ஶ்ரீனிவாச சித்தூரி மற்றும் இராம்பாபு பண்டாரு ஆகியோர் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சமந்தா மற்றும் ஆதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேம்பாலத்தில் சாலை தடுப்பு கற்களை நகர்த்தி யு டர்ன் எடுத்து செல்கிறார்கள் சில வாகன ஓட்டிகள். இதனால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து கவர் ஸ்டோரி எடுக்க முயற்சிக்கிறார் சமந்தா. சாலை விதிகளை மீறிய ஒருவரை பேட்டி எடுக்க சமந்தா முனையும் போது, அந்த நபர் மரணிக்கிறார். இதனால் சமந்தாவை போலீஸ் சந்தேகப்படுகிறது. மேம்பாலத்தில் விதிகளை மீறி யு டர்ன் எடுத்தவர்கள் குறித்து சமந்தா சேகரித்து வைத்திருக்கும் பட்டியலில் உள்ள அனைவருமே மர்மமான முறையில் மரணித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. இந்த மரணங்களுக்கும் சமந்தாவுக்கும் என்ன தொடர்பு என்பதை பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் திரில்லிங்காக சொல்லும் படம் தான் 'யு டர்ன்'.

மூடர் கூடம்

மூடர் கூடம் இயக்குனர் நவீன் இயக்கி வெளிவந்த திரைப்படம். 2013 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தில் நனீன், சென்ட்ராயன் , குபேரன் மற்றும் ராஜாஜி ஆகியோருடன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ஓவியா , அனுபமா குமார் , ஜெயபிரகாஷ் , ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா , உதய் மகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை நடராஜன் சங்கரன். இந்த படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தத் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு தென் கொரிய குற்ற-நகைச்சுவைத் திரைப்படமான அட்டாக் தி கேஸ் ஸ்டேஷனை அடிப்படையாகக் கொண்டது. நவீன், சென்ராயன், வெள்ளைச்சாமி, சபேஷ் என நான்கு இளைஞர்கள். சமூகத்தாலும், உறவுகளாலும் இவர்கள் சந்தித்த துன்பங்கள், அவமானங்கள், வேதனை ஆகியவை இவர்களை ஒன்றிணைக்கிறது. கொள்ளையடிக்கச் சென்ற வீட்டில் நடக்கும் காதல், காமெடி, ஆக்ஷன் இவை தான் மூடர் கூடம். படம், பெரிய அளவில் பேசப்பட்டது. படத்தை பார்த்து விழுந்த விழுந்து சிரித்தவர்கள் ஏராளம்.

டில்லி மாப்பிள்ளை

டில்லி மாப்பிள்ளை 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று வெளிவந்த திரைப்படமாகும். தேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். வெங்கடேசுவரா திரைப்பட நிறுவனம், பூமகள் தயாரிப்பு நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இத்திரைப்படத்தினை தயாரித்தன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://www.facebook.com/HTTamilNews

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.