மாப்பிள்ளை சம்பா அரிசி நரம்புத் தளர்ச்சியை போக்கி காமத்தை சுகமாக்குமா? உண்மை என்ன?
By Kathiravan V Aug 30, 2024
Hindustan Times Tamil
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான மாப்பிள்ளை சம்பா அரிசி தனது தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களுக்காக பரவலாக அறியப்படுகிறது. இளவட்டக் கல்லை தூக்கி போடும் இளைஞர்களுக்கே திருமணத்திற்கு பெண் கொடுக்கும் நிலை அந்த காலத்தில் இருந்தது. எனவே கல்யாண மாப்பிள்ளை ஆக உடல் உறுதி முக்கியம் என்பதால் உடலை தங்களது உடலை பலப்படுத்த சம்பா ரக அரிசியை சாப்பிட்டு வந்தனர். இதனால் இந்த ரக சம்பா அரிசிக்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வந்தது.
இந்த சம்பா அரிசியில் செய்யப்பட்ட பலகாரங்களை திருமணம் ஆன மாப்பிள்ளைகளுக்கு வழங்கும் பழக்கம் கிராம புறங்களில் இருந்து வருகின்றது.
155 நாட்கள் முதல் 160 நாட்கள் வரை வளரக்கூடிய மாப்பிள்ளை சம்பா ரக அரிசி ஆனது சம்பா பருவத்திலும், பின் சம்பா பருவத்திலும் பயிரிடப்படுவது வழக்கமாக உள்ளது. 100 கிராம் சமைக்காத மாப்பிள்ளை சம்பா அரிசியில் 350 கலோரிகள் நிறந்து உள்ளன. 74 முதல் 75 கிராம் மாவுச்சத்துக்கள் உள்ளது. 6 முதல் 7 கிராம் வரையிலான புரதமும், 3 முதல் 4 கிராம் வரையிலான நார்ச்சத்துக்களும் உள்ளன.
100 கிராம் பொன்னி அரிசியில் ஒரு மில்லி கிராமிற்கும் குறைவான இரும்பு சத்துக்களே உள்ளன. ஆனால் 100 கிராம் மாப்பிள்ளை சம்பா அரிசியில் 3 மில்லி கிராம் அளவுக்கு இரும்பு சத்து உள்ளது. இது மட்டுமின்றி மெக்னீஷியம், மங்கிசு, ஜிங்க் உள்ளிட்ட தாதுப்பொருட்கள் நாம் வழக்கமாக சாப்பிடும் வெள்ளை பொன்னி அரிசியை விட மாப்பிள்ளை சம்பா அரிசியில் அதிகம் உள்ளது.
மாப்பிள்ளை சம்பா அரிசி நரம்புத் தளர்ச்சியை போக்கி காமத்தை சுகமாக்குமா? உண்மை என்ன?
நாம் வழக்கமாக உண்ணும் அரிசியில் மேற்புற பகுதிகள் நீக்கப்படுகின்றன. இதனால் இதில் உள்ள பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான தையமின் எனப்படும் முக்கிய வைட்டமின்கள் இழக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் மாப்பிள்ளை சம்பாவில் இது போன்ற வைட்டமின்கள் முழுமையாக கிடைக்கும்.
மாப்பிள்ளை சம்பா போன்ற முழுதானியங்களில் தையமின் உள்ளிட்ட வைட்டமின்கள் உள்ளதால் நரம்புத் தளர்ச்சி குறையை சரி செய்யும் உணவாக உள்ளது.
தையமின் பற்றாக்குறை ஏற்படும் போது ஒரு வகையிலான நரம்புபாதிப்புகள் ஏற்படும். மாப்பிள்ளை சம்பா போன்ற முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நரம்புசார்ந்த பிரச்னைகள் வராது.
உங்க குழந்தைகளுக்கு சேமிக்கும் ஆர்வத்தை தூண்ட என்ன செய்யலாம் பாருங்க!