Malabar Police: சத்யராஜ் - கவுண்டமணி காம்போவின் கலக்கல் காமெடி..விறுவிறுப்பான த்ரில்லர் - 25வது ஆண்டில் மலபார் போலீஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Malabar Police: சத்யராஜ் - கவுண்டமணி காம்போவின் கலக்கல் காமெடி..விறுவிறுப்பான த்ரில்லர் - 25வது ஆண்டில் மலபார் போலீஸ்

Malabar Police: சத்யராஜ் - கவுண்டமணி காம்போவின் கலக்கல் காமெடி..விறுவிறுப்பான த்ரில்லர் - 25வது ஆண்டில் மலபார் போலீஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 06, 2024 07:47 PM IST

முதல் ப்ரேமிலேயே ஒரு கொலை, அதை செய்யும் கொலைகாரனை வெளிப்படையாக காட்டினாலும் அதன் பின்னணி காரணத்தை க்ளைமாக்ஸ் வரை சுவாரஸ்யமான த்ரில்லர் கதையை மலபார் போலீஸ் படத்தை இயக்குநர் பி. வாசு உருவாக்கியிருப்பார். அதற்கு சத்யராஜ் - கவுண்டமணி காம்போவும் உயிர் கொடுத்திருப்பார்கள்

சத்யராஜ் - கவுண்டமணி காம்போவின் கலக்கல் காமெடி..விறுவிறுப்பான த்ரில்லர் - 25வது ஆண்டில் மலபார் போலீஸ்
சத்யராஜ் - கவுண்டமணி காம்போவின் கலக்கல் காமெடி..விறுவிறுப்பான த்ரில்லர் - 25வது ஆண்டில் மலபார் போலீஸ்

சத்யராஜ் - கவுண்டமணி காம்போ

தமிழ் சினிமாவில் சிறந்த கமர்ஷியல் பட இயக்குநர்களில் ஒருவராக திகழும் பி. வாசு இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான படம் மலபார் போலீஸ். சத்யராஜ் படம் என்றாலே கவுண்டமணியும் கண்டிப்பாக நடிக்கும் காலகட்டத்தில் வந்த இந்த படத்தில் படம் முழுவதும் அவருடன் வரும் கேரக்டராக லூட்டி செய்திருப்பார் காமெடி கிங்.

நாயகியாக குஷ்பூ, இளம் காதலர்களாக அப்பாஸ், மும்தாஜ், வில்லனாக ஆனந்தராஜ் மற்றும் சிவக்குமார், ஜெய்கணேஷ், விஜயகுமார், வினுசக்கரவர்த்தி என பெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருப்பார்.

த்ரில்லர் கதை

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே அமைச்சர் கொலை செய்யப்படுவது, அவரை கொலை செய்யும் ஆனந்தராஜ், அந்த கொலையை பார்த்த சாட்சியாக அப்பாஸ், மும்தாஜ் என அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக காட்டிவிடுவார்கள். பின்னர் அந்த கொலைக்கான காரணம், அதன் பின்னணியையும் கண்டறிவதுதான் படத்தின் ஒன்லைன்.

சென்னைக்கு வரும் மலபார் போலீஸாக சத்யராஜ், அமைச்சர் கொலையின் பின்னிணியில் ஒளிந்திருக்கும் பல முடிச்சுகளையும், விஐபிகளின தொடர்பையும் கண்டறிவதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருப்பார்கள். வழக்கமாக சஸ்பென்ஸ் ஏதாவது வைத்து அதை தேடிய பயணமாக இருக்கும் க்ரைம் த்ரில்லர் பாணியில் இருந்து வித்தியாசப்பட்டு, திரைக்கதையில் அடுத்தடுத்து திருப்பங்களை கொடுக்கும் விதமாக அமைந்திருந்த இந்தப் படம் ரசிகர்களை நன்கு கவர்ந்தது.

அதுவும் சத்யராஜ் - கவுண்டமணி காம்போவின் காமெடி கலாட்டா சீரியஸாக செல்லும் படத்தின் கதையம்சத்துடனே இணைந்த பயணிக்கும். அந்த ஏழு நாள்கள் பாக்யராஜ், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமல்ஹாசன் ஆகியோருக்கு அடுத்தபடியாக படம் முழுக்க மலையாளம் கலந்த பலாக்காடு தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் சத்யராஜ் தோன்றியிருப்பார்.

வசனங்களுக்கு அதிக முக்கியத்துவம்

திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொண்ட அமைந்த இந்த படத்தில் காட்சிகளை விளக்க கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் அதிகமாக கொண்ட படமாகவே இருக்கும். குறிப்பாக கிளைமாக்ஸில் கொலையாளி கண்டுபிடித்து அவரை விசாரணை கமிஷனுக்கு வரவைப்பதோடு மட்டுமில்லாமல், அந்த இடத்தில் வைத்தை கொலையாளி முகத்திரை யை கிழக்கும் காட்சியில் சத்யராஜ் தனது நடிப்பில் அமர்களப்படுத்தியிருப்பார்.

எஸ்ஏ ராஜ்குமார் இசையில் அறிவுமதி எழுதிய என் காண்ணாடி தோப்புக்குள்ள, கலைக்குமார் எழுதிய பாலக்காட்டு பொண்ணு, நா. முத்துக்குமார் எழுதிய ஹாலிவுட் முதல் ஆகிய பாடல்கள் ஹிட்டாக அமைந்தன. இதில் என் காண்ணாடி தோப்புக்குள்ள, பாலக்காட்டு பொண்ணு இன்றளவும் ஒளித்துகொண்டிருக்கும் பாடலாக உள்ளது.

படத்தில் சத்யராஜ் போலீசாக வந்தாலும் பிளாஷ்பேக்கில் தனது தாத்தா பற்றி கூறும் காட்சிகளை தவிர படம் முழுவதும் யுனிபார்ம் இல்லமலேயே தோன்றியிருப்பார். இந்த படம் வெளியான ஆண்டில் நூறு நாள்களை கடந்து வெற்றி படங்களில் ஒன்றாக திகழ்ந்த மலபார் போலீஸ் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.