சர்ப்ரைசாக ஓடிடியில் வெளியான சசிக்குமாரின் நந்தன்..எங்கு பார்க்கலாம்? இந்த வாரம் ரிலீசான பிற படங்கள்
மாரிசெல்வராஜ் வாழை, விமலின் போகுமிடம் வெகு தூரமில்லை, யாஷிகா ஆனந்த் நடித்த படிக்காத பக்கங்கள் படங்களுடன் சசிக்குமார் நடிப்பில் விமர்சக ரீதியாக பேசப்பட்ட நந்தன் படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் சசிக்குமார் நடிப்பில் வெளியான படம் நந்தன். இந்த படத்துடன் லப்பர் பந்து, தோனிமா, கோழிப்பண்ணை செல்லத்துரை, கடைசி உலகப் போர், தோழர் சேகுவேரா, டோப்பைமனை @ 2.22, ஹக் மீ மோர் ஆகிய படங்கள் வெளியாகின.
இதில் ரசிகர்களை கவர்ந்ததோடு, விமர்சக ரீதியாகவும் பாரட்டை பெற்ற படமாக நந்தன் உள்ளது. கத்துக்குட்டி, உடன் பிறப்பே படங்களை இயக்கிய இரா. சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
நந்தன் ஓடிடி ரிலீஸ்
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் தலித் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாலும் அவருக்கு எதிராக நடக்கும் தீண்டாமை, அந்த நபர் சந்திக்கும் அவமானங்கள், வலிகளை, அவர்களுக்கு பின்னால் நடக்கும் அரசியலை கூறும் விதமாக இந்த படம் உருவாகியுள்ளது.
படத்தில் தலித் ஊராட்சி மன்ற தலைவராக சசிக்குமாரும், இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவருக்கு எதிராக அரசியல் செய்பவராகவும் நடித்திருக்கிறார்கள். ஸ்ருதி பெரியசாமி கதையின் நாயகியாக நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்திய இந்த படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான படங்களில் முதல் படமாக நந்தன் ஓடிடி தளத்தில் ரிலீசாகியுள்ளது. இந்த படத்துடன் வெளியான லப்பர் பந்து படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மாரிசெல்வராஜ் வாழை, விமலின் போகுமிடம் வெகு தூரமில்லை, யாஷிகா ஆனந்த் நடித்த படிக்காத பக்கங்கள் படங்களுடன் இந்த படமும் இந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
நந்தன் கதை
புதுக்கோட்டை மாவட்டம் வணங்கான்குடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. பரம்பரை பரம்பரையாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியே இல்லாமல் ஆள்கிறது சொம்புலிங்கத்தின் குடும்பம் (பாலாஜி சக்திவேல்). தேர்தலுக்கு வேட்பாளரை தேர்வு செய்யும்போதே தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உத்தரவிடுகிறார்கள்.
அப்படி எதிர்த்து போட்டியிட முயற்சிக்கும் நந்தன் என்கிறவர் அடுத்த காட்சியில் கொல்லப்படுகிறார். இதே வணங்கான்குடியில் சொம்புலிங்கத்தின் தீவிர விசுவாசியாக இருந்து வருகிறார் கூல் பானை என்கிற அம்பேத்குமாராக வருகிறார் சசிகுமார்
இந்த வருடமும் தேர்தலில் போட்டியே இல்லாமல் வெற்றிபெற இருக்கும் மகிழ்ச்சியில் சொம்புலிங்கம் இருக்கும்போது அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வந்து சேர்கிறது. வணங்கான்குடி ஊராட்சி ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இனி தான் போடியிட முடியாது என தெரிந்துகொண்ட சொம்புலிங்கம் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை தன் சார்பாக தேர்தலில் போட்டியிட வைக்க முடிவு செய்கிறார். தன் சார்பாக கூல் பானையை நிற்க வைத்து அவனை வெற்றிபெற செய்கிறார்.
பதவி, அரசியல் தன் மக்களின் முன்னேற்றம் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கண்மூடித்தனமாக தன் முதலாளி சொல்வதை மட்டும் செய்கிறார். ஊராட்சி மன்ற தலைவரான பின்னும் தன் மக்களின் சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுத்துகிறது.
ஆள்வதற்கு தான் அதிகாரம் தேவை என நினைக்கும் அம்பேத்குமார் வாழ்வதற்கே அதிகாரம் எவ்வளவு முக்கியம் என உணர்ந்து கொள்ள நேரத்தில், தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு என்ன செய்கிறார் என்பதை உணர்ச்சிவசமான திரைக்கதையுடன் சொல்கிறது நந்தன் படம்
டாபிக்ஸ்