வாழை, போகுமிடம் வெகு தூரமில்லை, யாஷிகா ஆனந்த் திர்ல்லர் படம்..விஜயதசமி ஸ்பெஷலாக ஓடிடியில் வெளியாகும் படங்கள் லிஸ்ட் இதோ
விஜயதசமி ஸ்பெஷலாக தமிழ், இந்தி உள்பட ஓடிடியில் வெளியாகும் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம். மாரிசெல்வராஜ் வாழை, விமல் நடித்த போகுமிடம் வெகு தூரமில்லை போன்ற படங்கள், யாஷிகா ஆனந்த் நடித்த த்ரில்லர் படம் தமிழில் வெளியாகவுள்ளன.

நவராத்திரி கொண்டாட்டம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், விஜயதசமி விடுமுறை ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியாகியுள்ளது. இது தவிர ஜீவா, பிரியா பவானி ஷங்கர் நடித்திருக்கும் பிளாக் என்ற சயின்ஸ் பிக்சன் ஹாரர் படம் நாளை வெளியாகிறது. மேலும் ஆலியா பட் நடித்திருக்கும் ஜிக்ரா என்ற இந்தி படமும் வெளியாகிறது.
விஜயதசமியை முன்னிட்டு பிரபல ஓடிடி தளங்களிலும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் புதிய படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் புதிய படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.
வாழை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் எந்த பெரிய நடிகர்கள் இல்லாத போதிலும், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது வாழை படம். படத்தில் அறிந்த முகமாக நிகிலா விமல், திவ்யா துரைசாமி போன்ற வெகு சில நடிகர்களே இருக்கிறார். விமர்சக ரீதியாக பாராட்டை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டைய கிளப்பிய வாழை அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது. இந்தப் படம் தமிழ் தவிர மலையாளம், இந்தி, தெலுங்கு, பெங்காளி, மராத்தி மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.