Samantha: ரீல் செய்து புரோபோஸ் செய்த சமந்தாவின் பக்தன் - பிரேக்அப்பை மறந்து குறும்புத்தனமாக பதிலளித்த நடிகை சமந்தா!-samantha reacts mischievously and forgetting her breakup with nagachaitanya and a fan of samantha who made a reel - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: ரீல் செய்து புரோபோஸ் செய்த சமந்தாவின் பக்தன் - பிரேக்அப்பை மறந்து குறும்புத்தனமாக பதிலளித்த நடிகை சமந்தா!

Samantha: ரீல் செய்து புரோபோஸ் செய்த சமந்தாவின் பக்தன் - பிரேக்அப்பை மறந்து குறும்புத்தனமாக பதிலளித்த நடிகை சமந்தா!

Marimuthu M HT Tamil
Aug 11, 2024 03:17 PM IST

Samantha: ரீல் செய்து புரோபோஸ் செய்த சமந்தாவின் பக்தன் - பிரேக்அப்பை மறந்து குறும்புத்தனமாக பதிலளித்த நடிகை சமந்தாவின் கதையைப் பார்க்கலாம்.

Samantha: ரீல் செய்து புரோபோஸ் செய்த சமந்தாவின் பக்தன் - பிரேக்அப்பை மறந்து குறும்புத்தனமாக பதிலளித்த நடிகை சமந்தா!
Samantha: ரீல் செய்து புரோபோஸ் செய்த சமந்தாவின் பக்தன் - பிரேக்அப்பை மறந்து குறும்புத்தனமாக பதிலளித்த நடிகை சமந்தா!

முகேஷ் சிந்தா என்னும் அந்த ரசிகர் சமந்தாவிடம் எவ்வாறு புரோபோஸ் செய்யப்போகிறார் என்பது பற்றி ஒரு காமெடியான ரீலைப் பகிர்ந்திருந்தார். அந்த ரீல் வீடியோ வைரல் ஆகியதுSamantha reacts mischievously and forgetting her breakup with Nagachaitanya and a fan of Samantha who made a reel. 

ஒரு கட்டத்தில் அது சமந்தாவின் பார்வைக்குச் சென்று, அதற்கு சமந்தாவும் பதில் கொடுத்துள்ளார். இந்த செய்தி தான் இணையதளத்தில் ட்ரெண்டிங்காகப் போய் கொண்டிருக்கும் சுவாரஸ்யமான தகவல் ஆகும். 

வீடியோ செய்து சமந்தாவுக்கு புரோபோஸ் செய்த ரசிகர் - குறும்புத்தனமாக பதிலளித்த சமந்தா:

முகேஷ் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, இதைப் பார்க்கவில்லையென்றால் ஒரு 100 சதவீத உண்மையான காணொளியை இழப்பீர்கள் என்று பதிவிட்டு, ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸை வெளியிட்டார். 

அந்த இன்ஸ்டாகிராம் ரீலில், சமந்தாவுக்கு புரோபோஸ் செய்ய முகேஷ் செல்வதுபோல் கான்செஃப்ட் ரெடிசெய்யப்பட்டு இருக்கிறது. 

அதில், ‘’சமந்தாவைப் பார்க்க கிளம்பிக் கொண்டு இருக்கிறேன். அவர் கவலைப்படக்கூடாது. ஏனென்றால், நான் அவருக்காக எப்போதும் அவர் வழியில் இருப்பேன் என்று சொல்லிவிட்டு முகேஷ், சமந்தாவின் வீட்டினை அடைகிறார். அதன்பின், சமந்தாவின் வீட்டிலுள்ள ஜிம்முக்குள் செல்லும், முகேஷ் சமந்தாவிடம், ‘பாருங்க. நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். நீங்களும் நானும் ஒரு சிறந்த ஜோடியாக இருக்க முடியும். நீங்கள் சம்மதித்தால், நான் உங்களைத் திருமணம் செய்யத் தயார். எனக்கு இரண்டு ஆண்டுகள் கொடுங்கள். நான் பொருளாதார ரீதியாக தன்னிச்சையாக ஆனபின், நான் உங்களை வந்து பார்க்கிறேன். என்னுடைய இதயத்தில் இருந்து வரும் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளுங்கள். என்னை தயவுசெய்து கல்யாணம்செய்துகொள்ளுங்கள் சமந்தா..ப்ளீஸ் மேரி மீ.. ப்ளீஸ் சமந்தா’’என்று பதிவிட்டுள்ளார். அப்படியே இதய வடிவப்பூவைத் தருகிறார், முகேஷ்.  இந்த இன்ஸ்டாகிராம் ரீல் மிகவும் வைரல் ஆனது. 

இந்த குறும்புத்தனமான வீடியோ வைரல் ஆன நிலையில்,இதைப் பார்த்த சமந்தா, ‘’ பின்னணியில் உள்ள ரீல் என்னை கிட்டத்தட்ட நம்ப வைத்தது’’என்று ரசிகரின் வீடியோவுக்குப் பதிலளித்தார். 

இதனால், ஆச்சரியப்பட்ட அந்த ரசிகர் முகேஷ், சமந்தா தனது நாளை உருவாக்கிவிட்டார் என்றும்; தான் எப்போதும் சமந்தாவின் ரசிகராக இருப்பேன் என்றும், உலகமே சமந்தாவுக்கு எதிராக இருந்தால், தான் உலகிற்கு எதிராக இருப்பேன் என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் முகேஷ் எழுதினார். சமந்தாவின் வெறித்தனமான ரசிகருக்கு, அவர் அளித்த பதில் மூலம் சமந்தாவின் ரசிகரும் பிரபலமாகியுள்ளார். 

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து:

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் செய்து கோவாவில் 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பல ஆண்டுகளாக டேட்டிங் செய்தனர். சில கருத்துவேறுபாடுகளால், 2021ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து செய்தனர். பல மாத ஊகங்களுக்குப் பிறகு அவர்கள் இன்ஸ்டாகிராமில் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். அப்போதிருந்து, நடிகை சமந்தா அதை ஏற்றுக்கொள்ள அவர் எவ்வாறு போராடினார் என்பது பற்றி வெளிப்படையாகத் தகவல்களைப் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா, இந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். 

இதை அவரது தந்தையும் உச்ச நடிகரான நாகார்ஜுனா எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளத்தில் அறிவித்தார். மேலும், நிச்சயதார்த்தப் படங்களைப் பகிர்ந்து கொண்டார். சோபிதா நாக சைதன்யாவுடனான படங்களையும் அவர்களின் உறவை விவரிக்கும் இதயப்பூர்வமான கவிதையையும் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.