சமந்தா தரப்பில் நாக சைதன்யாவுக்கு நோட்டீஸ்! அஜித்குமார் பெயரில் போலி வெப்சைட் - டாப் சினிமா செய்திகள் இன்று
சமந்தா தரப்பில் நாக சைதன்யாவுக்கு நோட்டீஸ், அஜித்குமார் பெயரில் போலி வெப்சைட், பிசாசு 2 படத்துக்கு இடைக்கால் தடை, அமரன் படத்தை வெகுவாக பாராட்டிய ரஜினி உள்பட டாப் சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
இந்த ஆண்டில் தீபாவளி விடுமுறை சனி, ஞாயிறுடன் சேர்ந்த நான்கு நாள்கள் என இருக்கும் நிலையில் புதிய சினிமாக்களின் ரிலீஸ் மற்றும் ஓடிடியில் புதிய படங்களில் ரிலீஸ் என மக்களுக்கு நல்ல திரைவிருந்து கிடைத்திருக்கிறது. இதற்கிடையே இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.
அஜித்குமார் ரேஸிங் அணியின் இணையத்தளம் போலி
ajithkumarcarracing.com என்ற வெப்சைட் அஜித்குமாரின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்ல. இதை புறக்கணியுங்கள். இதுபற்றிய தகவல் அதிகாரப்பூர்வ சேனலில் தான் வெளியாகும் என அஜித்தின் மேனேஜரான சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார் ரேஸிங்கில் தற்போது கவனம் செலுத்தி வரும் அஜித், உலகளவில் பிரபலமான 23 H Dubai 2025 & The European 23H Championship – Porche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார். தன் அணியுடன் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள், வீடியோ வைரலானது. இதையடுத்து அவரது ரேஸிங் அணி புதிய இணையத்தளம் தொடங்கியிருப்பதாக தகவல்கள் உலா வந்த நிலையில், இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஓடிடியில் வெளியான சட்டம் என் கையில்
சதீஷ் கதையின் நாயகனாக நடித்து கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான ஆக்ஷன் த்ரில்லர் படம் சட்டம் என் கையில். சிக்சர் என்ற படத்தை இயக்கிய சச்சி இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஒரு இரவில் நடக்கும் கதையாக இருக்கும் சட்டம் என் கையில் படம், கொலைப்பழியில் சிக்கும் ஹீரோ அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.
சமந்தா தரப்பில் நாக சைதன்யாவுக்கு நோட்டீஸ்
முன்னாள் தம்பதிகளான நாக சைதன்யா, சமந்தா ஆகியோர் திருமணத்துக்கு முன்்பு ஹைதராபாத்தில் பிளாட் ஒன்ரை ரூ. 34 கோடிக்கு வாங்கியுள்ளனர். தங்களது கனவு வீடாக இருவரும் அதை உருவாக்கிய நிலையில், அந்த வீட்டுக்கு சமந்தாவே அதிகமாக செலவு செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது சோபிதாவை திருமணம் செய்ய இருக்கும் நாக சைதன்யா, அந்த பிளாட்டை அவருக்கு பரிசு அளிக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இதையடுத்து இந்த விவகாரத்தில் அந்த பிளாட் வாங்கியதில் தனக்கான பங்கை திருப்பி தர வேண்டும் என சமந்தா தரப்பில், நாக சைதன்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.
விமர்சகரை மிரட்டிய விவகாரத்தில் மலையாள நடிகர் விளக்கம்
மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘பனி’ திரைப்படம் கடந்த அக்டோபர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை வெளியிட்டதால், தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜோஜூ ஜார்ஜ் மிரட்டியதாக ஆதர்ஷ் என்ற சினிமா விமர்சகர் குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் மலையாள சினிமாவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், விமர்சகரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை ஒப்புக்கொண்ட ஜோஜூ ஜார்ஜ் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு பின்னால் பலரின் கடினமான கூட்டு உழைப்பு உள்ளது. நான் ஒன்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானவன் அல்ல. ஒரு படம் குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள விமர்சகர்களுக்கு உரிமை உண்டு. இதற்கு முன்னர் பல படங்கள் விமர்சிக்கப்பட்டுள்ளன. ஆனால் நான் யாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதில்லை. ஆனால், இந்த விவகாரத்தை பொறுத்தவரை, விமர்சகர் படத்தின் ஸ்பாயிலரை வெளியிட்டுள்ளார். அதை பல தளங்களிலும் வெளியிட்டு, வேண்டுமென்றே படத்தை இழிவுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளார். நான் முன்பு சொன்னதை தான் இப்போதும் சொல்கிறேன்.
வாழ்க்கை எனக்கு ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை. நான் இன்று இந்த இடத்தை அடைவதற்கு பல தடைகளையும், வலிகளையும் கடந்து வந்துள்ளேன். பலரின் 2 ஆண்டுகள் கடினமான உழைப்பு தான் இந்த திரைப்படம். இந்தப் படத்துக்காக நான் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளன். அதனை யாரோ ஒருவர் தன் சுயநலத்துக்காக அதை வீணாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை பார்த்துக்கொண்டு நான் விடமாட்டேன். அவருக்கு எதிராக நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.
சுழல் 2 வெப்சீரிஸ் ரிலீஸ் அப்டேட்
பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க த்ரில்லர் சீரிஸாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது சுழல் என்ற வெப் சீரிஸ். தற்போது சுழல் 2 வெப்சீரிஸ் உருவாகி வரும் நிலையில், இதில் 96 படப்புகழ் கெளரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதையடுத்து சுழல் 2 சீரிஸ் 2024ஆம் ஆண்டு டிசம்பர் அல்லது 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அமேசான் பிரைமில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
பிசாசு 2 படத்துக்கு இடைக்கால தடை
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிசாசு 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து திரைப்பட விநியோக உரிமையை பெற்ற ராக்ஃபோர்ட் என்டர்டைன்மென்ட், ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய பணத்தில், ரூ. 2 கோடியை நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகையை திருப்பி கொடுக்காமல் குருதி ஆட்டம், மன்மத லீலை ஆகிய படங்களை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த படங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்தியஸ்தரை நியமித்தது. அதன் அடிப்படையில், மத்தியஸ்தர் விசாரணையின் பேரில், ரூ. 1 கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 மற்றும் ஜிஎஸ்டி முறையில் ரூ. 31 லட்சத்து 20 ஆயிரம் வழங்க ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை கடைபிடிக்காமல் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பாக பிசாசு 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதனால், பிசாசு 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. அத்துடன் நவம்பர் 18ஆம் தேதிக்குள் இந்த மனுவுக்கு ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
தயவுசெய்து அனைவரும் பாருங்கள் - அமரன் படத்தை வெகுவாக பாராட்டிய ரஜினிகாந்த்
“என்னால அழுகையை கண்ட்ரோல் பண்ண முடியல. இந்த படத்துல ஒரு பெர்ஷனல் டச்சும் இருக்கிறது. தயவு செய்து அமரன் படத்தை எல்லோரும் பாருங்கள்” என கூறியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர்களை வெகுவாக பாராட்டியுள்ளார். ரஜினியின் பாராட்டு விடியோவை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் யூடியூப் சேனலில் பகிரப்பட்டுள்ளது
மூன்றாவது முறையாக ஆஜராகாத தனுஷ் - ஐஸ்வர்யா
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தாக்கல் செய்த பரஸ்பர விவகாரத்து வழக்கில் விசாரணை இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து விலகும் நடிகை
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் ராஜியாக நடித்து வரும் நடிகை அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த சீரியலில் இரண்டாவது மகன் கதிரின் மனைவியாக ராஜி என்ற கேரக்டரில் நடிகை ஷாலினி நடித்து வருகிறார். ஷாலினி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், அதன் காரணமாகத்தான் சீரியலில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாகசைதன்ய - சோபிதா விவகரத்தை கணித்த ஜோதிடர் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகிய இருவரும் 2027ஆம் ஆண்டு விவாகரத்து செய்வார்கள் என்றும், வேறொரு பெண்ணால் நாக சைதன்யா பெரும் சவால்கள் எதிர்கொள்வார் என்றும் பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். அவரது இந்த கணிப்பு வீடியோ இணையதளங்களில் வெளியே வந்து வைரலாகியது.
இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், உரிய விசாரணை நடத்த மகளிர் ஆணையத்துக்கு தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தவுடன் ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த வழக்கை சவாலாக எடுத்துக் கொள்வதாகவும், சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்திப்பேன் என்று ஜோதிடர் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்