ஒப்பந்தத்தில் மீறல்..ரூ. 2 கோடி பாக்கி தொகை நிலுவை..பிசாசு 2 வெளியிட இடைக்கால தடை
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிசாசு 2 படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாக்கி தொகை நிலுவையில் இருப்பதால் இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் திகில் படமாக உருவாகியிருக்கிறது பிசாசு 2. இந்த படத்தில் கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். இதையடுத்து, ஒப்பந்தப்படி பண பாக்கியை செலுத்ததாத காரணத்தால் இந்த படத்தின் வெளியீட்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிசாசு 2 பட ரிலீசுக்கு எதிராக மனு
பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து திரைப்பட விநியோக உரிமையை பெற்ற ராக்ஃபோர்ட் என்டர்டைன்மென்ட், ஒப்பந்தப்படி செலுத்த வேண்டிய பணத்தில், ரூ. 2 கோடியை நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகையை திருப்பி கொடுக்காமல் குருதி ஆட்டம், மன்மத லீலை ஆகிய படங்களை ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்தது வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த படங்களுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்தியஸ்தரை நியமித்தது. அதன் அடிப்படையில், மத்தியஸ்தர் விசாரணையின் பேரில், ரூ. 1 கோடியே 17 லட்சத்து 15 ஆயிரத்து 552 மற்றும் ஜிஎஸ்டி முறையில் ரூ. 31 லட்சத்து 20 ஆயிரம் வழங்க ராக்போர்ட் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.