Samantha: "நமக்கு பிறக்கபோகும் அழகான குழந்தை.." கண்களில் கண்ணீருடன் சமந்தா - வைரலாகும் விடியோ
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Samantha: "நமக்கு பிறக்கபோகும் அழகான குழந்தை.." கண்களில் கண்ணீருடன் சமந்தா - வைரலாகும் விடியோ

Samantha: "நமக்கு பிறக்கபோகும் அழகான குழந்தை.." கண்களில் கண்ணீருடன் சமந்தா - வைரலாகும் விடியோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Aug 28, 2024 04:25 PM IST

நமக்கு பிறக்கபோகும் அழகான குழந்தைக்கு நீங்கள் சரியான தந்தையாக இருப்பீர்கள் என நாக சைதன்யாவுடன் திருமண மேடையில் கண்களில் கண்ணீருடன் சமந்தா பேசிய விடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த விடியோவுக்கு ரசிகர்கள் பலரும் எமோஷனலான கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

Samantha: "நமக்கு பிறக்கபோகும் அழகான குழந்தை.." கண்களில் கண்ணீருடன் சமந்தா - வைரலாகும் விடியோ
Samantha: "நமக்கு பிறக்கபோகும் அழகான குழந்தை.." கண்களில் கண்ணீருடன் சமந்தா - வைரலாகும் விடியோ

இந்த நிகழ்வுக்கு பின்னர் நாக சைதன்யாவின் முன்னாள் மனைவியும், நடிகையுமான சமந்தா நாள்தோறும் லைம் லைட்டில் இருந்து வருகிறார். தினமும் சமந்தாவை பற்றி ஏதாவது செய்தி, கிசுகிசு, நாக சைதன்யாவையும், சமந்தாவையும் இணைத்து புதுபுது தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக நாக சைதன்யா - சமந்தா ஆகியோரின் நினைவலைகளை வெளிப்படுத்தும் விதமாக விடியோக்களும், செய்திகளும் அவ்வப்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.

கண்ணீர் வீட்டபடி சமந்தா வாக்குறுதி

இதையடுத்து நாக சைதன்யா - சமந்தா திருமண நிகழ்வின்போது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று தற்போது வைரல் மெட்டீரியல் ஆகியுள்ளது. இந்த முன்னாள் ஸ்டார் தம்பதிகள் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள்.

அதன்படி கிறிஸ்தவ முறைப்படி திருமணத்தில், தம்பதிகளுக்கு இடையே அளிக்கும் வாக்குறுதியின்போது சமந்தா கண்கலங்கியுள்ளார். நாக சைதன்யாவை கணவராக ஏற்றுக்கொள்வது பற்றி அவர் வாக்குறுதி அளிக்கையில், "எல்லா வாதங்களும் தொனியில் மாற்றம் இல்லாமல் எப்படி தீர்க்கப்படுமோ, அதுபோல் நான் அழுவதன் மூலம் எதையும் விட்டு வெளியேற என்னை அனுமதிக்கமாட்டேன்.

உங்களால் நான் மெதுவாக என்னை உணர்ந்து, நான் என்னாவாக ஆக கனவு கண்டேனோ அப்படி கண்டிப்பாக மாறுவேன். நான் கண்டதிலேயே மிக சிறந்த மனிதன் நீங்கள், ஒரு நாள் நமக்கு பிறக்கும் அழகான குழந்தைக்கு சரியான தந்தையாக இருப்பீர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட வாழ்க்கை, உலகம் என எந்தவொரு எதார்த்திலும் உன்னை நான் தேர்வு செய்வேன்" என மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.

ரசிகர்கள் கருத்து

இந்த நினைவலை விடியோ இரு நடிகர்களின் ரசிகர்களையும் உணர்ச்சி பெருக்கை ஏற்ற செய்துள்ளது. குறிப்பாக சமந்தாவின் ரசிகர்கள் பலரும் தங்களது ஆசை நாயகி, உயிருக்கு மேலாக காதலித்து வந்தவரிடம் காதல் வெளிப்படுத்தியதை பற்றி நினைவுகூறி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

"அவன் மீது அவள் அதீத காதலில் இருந்துள்ளார், ஆனால் பலரும் அவள் குழந்தை வேண்டாம் என சொன்னதாக சொல்கிறார்கள்", "கண்களில் கண்ணீர் வடியும் அவளை அவன் கட்டியணைத்திருக்க வேண்டும். எந்தவொரு ஆணும் தனது அன்புக்குறியவள் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கமாட்டான்", "நாக சைதன்யா சமந்தவிடமிருந்து பிரிந்திருக்க கூடாது" போன்ற கருத்துகளை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

நாக சைதன்யா - சமந்தா உறவு

நடிகர்களான நாக சைதன்யா மற்றும் சமந்தா ஆகியோர் 2017இல் திருமணம் செய்து கொண்டனர். நான்கு வருட திருமண பந்தத்துக்கு பின்னர் 2021இல் பிரிந்தனர். சமந்தாவை பிரிந்த பிறகு, நாகசைதன்யா அவரும் அவரது முன்னாள் மனைவியும் இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் நீக்கினார்.

இதையடுத்து நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதாவுக்கும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நாகார்ஜுனாவின் வீட்டில் இரு குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஜோடி 2022 முதல் டேட்டிங் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் உறவு பற்றிய வதந்திகள்தொடர்ந்து வெளியாகி வந்தது. ஆனால் இது பற்றி வாய் திறக்காமல் இருவரும் மௌனமாக இருந்தனர். இதைத்தொடர்ந்து தற்போது புதிய நட்சத்திர ஜோடிகளாக மாறவுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.