Salman khan: தொடர் அச்சுறுத்தல்... திக்.. திக்... தவிக்கும் இந்திய பிரபலம்... ஒரே நாளில் 2 முறை! என்ன நடந்தது?-salman khan and his family faces death threat twice in a day - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Salman Khan: தொடர் அச்சுறுத்தல்... திக்.. திக்... தவிக்கும் இந்திய பிரபலம்... ஒரே நாளில் 2 முறை! என்ன நடந்தது?

Salman khan: தொடர் அச்சுறுத்தல்... திக்.. திக்... தவிக்கும் இந்திய பிரபலம்... ஒரே நாளில் 2 முறை! என்ன நடந்தது?

Malavica Natarajan HT Tamil
Sep 20, 2024 10:51 AM IST

Salman khan: இந்திய அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் சல்மான் கானுக்கு ஒரே நாளில் 2 முறை கொலை அச்சுறுத்தல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவருக்கு ஏதும் நேரக் கூடாது என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Salman khan: தொடர் அச்சுறுத்தல்... திக்.. திக்... தவிக்கும் இந்திய பிரபலம்... ஒரே நாளில் 2 முறை! என்ன நடந்தது?
Salman khan: தொடர் அச்சுறுத்தல்... திக்.. திக்... தவிக்கும் இந்திய பிரபலம்... ஒரே நாளில் 2 முறை! என்ன நடந்தது? (AFP)

சல்மான் கானுக்கு பாதுகாப்பு

ஏற்கனவே நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் எனும் மாஃபி.யா கும்பலால் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அவர் வெளியில் செல்லும் போதெல்லாம் குண்டு துளைக்காத காரில் தான் பயணம் செய்கிறார். அதே சமயத்தில் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் அவருக்கு நள்ளிரவு நேரத்தில் இந்த அச்சுறுத்தல் சம்பவம் நடந்துள்ளது.

நள்ளிரவில் அச்சுறுத்தல்

நடிகர் சல்மான் கான் தனது வேலைகளை முடித்துவிட்டு நேற்று இரவு 12 மணிக்கு மேல், மெஹபூப் ஸ்டூடியோவிலிருந்து வீடு திரும்பியுள்ளார். அச்சமயத்தில் பைக் ஒன்று சல்மான் கான் காரை இடிப்பது போல வந்து அச்சுறுத்தியது. இந்த சமயத்தில் சல்மான் கான் வாகனத்தை சுற்றி பாதுகாப்பு கான்வாய்களும் வந்துள்ளது.

பாதுகாப்பு வீரர்கள் எவ்வளவு எச்சரித்தும் அந்த பைக் விலகிச் செல்லாததால், காவலர்கள் சல்மான் கானை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அதில் அந்த நபர் கல்லூரி மாணவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிறரை அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டியதாகக் கூறி அந்த நபர் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

தந்தைக்கும் அச்சுறுத்தல்

இது ஒருபுறம் இருக்க, சல்மான் கானின் தந்தை சலீம் கான், காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மாஃபியா கும்பலைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோவை வீட்டிற்கு அனுப்பி வைக்கவா என மிரட்டும் தொனியில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்த விசாரணையில், இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களில் ஆண் ஒருவரும், பர்தா அணிந்த பெண் ஒருவரும் இருந்தது தெரியவந்தது. மேலும், அவர்களது வண்டி எண்ணை வைத்து விசாரித்ததில், இருவரும் விளையாட்டாக இப்படி செய்தோம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து போலீசார், இருவர் மீதும் பொது இடத்தில் தொந்தரவு செய்தல், அச்சுறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்போது, லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர், இது வெறும் டிரைலர் தான் என சோசியல் மீடியா மூலம் சல்மான் கானிற்கு எச்சரிக்கை விடுத்தார். 

இதனைத் தொடர்ந்து சல்மான் கான் வெளியில் செல்லும்போது தனது தனிப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் செல்ல அரசு அனுமதி வழங்கியது. மேலும், சல்மான் கானின் பாதுகாப்பு நிலை ஒய் பிளஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு தான் சல்மான் கான் குண்டு துளைக்காத பாதுகாப்பு நிறைந்த புதிய காரை வாங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதால், அவரது ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.