Donald Trump Shot: அமெரிக்காவில் பயங்கரம்..முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு - அதிர்ச்சி வீடியோ!
Donald Trump Shot: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி இடையே நேருக்கு நேர் கடும் போட்டி நிலவுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களம் காண்கிறார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு
பொதுக்கூட்டத்தில் ட்ரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் ட்ரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு ட்ரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. காதில் காயமடைந்த ட்ரம்ப் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.