தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rs Shivaji: 'கமல் தான் காரணம்.. மாதம் மாதம் மாத்திரை கொடுப்பார்' - மறைந்த ஆர்.எஸ் சிவாஜி

RS Shivaji: 'கமல் தான் காரணம்.. மாதம் மாதம் மாத்திரை கொடுப்பார்' - மறைந்த ஆர்.எஸ் சிவாஜி

Aarthi V HT Tamil
Sep 02, 2023 12:13 PM IST

ஆர்.எஸ்.சிவாஜி, கமல் ஹாசன் குறித்து பேசி இருந்த வீடியோ வைரலாகிறது.

ஆர்.எஸ் சிவாஜி, கமல்
ஆர்.எஸ் சிவாஜி, கமல்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படத்தில் இவர்  ‘சார் நீங்க எங்கயோ போயீட்டீங்க சார்’ என்று பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் என்றால் கண்டிப்பாக இவருக்கான பாத்திரம் நிச்சியம் படத்தில் இருக்கும்.

வில்லன், ஆயுத எழுத்து, கோலமாவு கோகிலா, சூரரைப் போற்று போன்ற படங்களில் நடித்து இருந்தார். கடைசியாக கார்கி படத்தில் சாய் பல்லவியின் தந்தையாக நடித்து இருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக ஆர்.எஸ்.சிவாஜி மரணமடைந்தார். அவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கமல் ஹாசன் குறித்து பேசி இருந்த வீடியோ வைரலாகிறது.

முன்னதாக அவர் கமல் ஹாசன் குறித்து பேட்டி அளித்து இருந்தார். அவர் கூறியதாவதது, “ நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் கமல் தான். நன்றியை மறக்க மாட்டேன். என் இதயத்தில் 4 ஓட்டைகள் இருந்தது. சிகிச்சைக்கு அவரிடம்தான் உதவி கேட்டேன். எனக்கான எல்லா சிகிச்சையையும் அவரே பார்த்து கொண்டார்.

அதேபோல் கொரோனா காலத்தில் மாத்திரைகள் வாங்கவும் காசு இல்லை. தயக்கமாக இருந்தது. அதனால் நேராக சென்று அவரிடம் உதவி கேட்டேன்.

அப்போது முதல் இப்போது வரை எனக்கு ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து மாதம் மாதம் மாத்திரைகள் வந்து கொண்டிருக்கிறது. கமல் இல்லை என்றால் நான் இல்லை. மாத கடைசியில் போன் செய்து கேட்டு வாங்கி கொடுப்பார்கள்” என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்