அபிராமியை பார்த்து ரேவதி சொன்ன வார்த்தை.. பாட்டியின் ஆசைக்காக கார்த்திக் செய்த ஏற்பாடு- கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அபிராமியை பார்த்து ரேவதி சொன்ன வார்த்தை.. பாட்டியின் ஆசைக்காக கார்த்திக் செய்த ஏற்பாடு- கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

அபிராமியை பார்த்து ரேவதி சொன்ன வார்த்தை.. பாட்டியின் ஆசைக்காக கார்த்திக் செய்த ஏற்பாடு- கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

Divya Sekar HT Tamil
Dec 05, 2024 01:19 PM IST

அபிராமியை பார்த்து ரேவதி சொன்ன வார்த்தை, பாட்டியின் ஆசைக்காக கார்த்திக் செய்த ஏற்பாடு கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் என்ன என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

அபிராமியை பார்த்து ரேவதி சொன்ன வார்த்தை.. பாட்டியின் ஆசைக்காக கார்த்திக் செய்த ஏற்பாடு- கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
அபிராமியை பார்த்து ரேவதி சொன்ன வார்த்தை.. பாட்டியின் ஆசைக்காக கார்த்திக் செய்த ஏற்பாடு- கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

கார்த்திக் மற்றும் ரேவதி

அதாவது, அபிராமி ஏழை போல கெட்டப் போட்டு ரேஷன் கடையில் காத்துக் கொண்டிருக்க ரேஷன் கடையில் வேலை செய்யும் பெண்மணி லைன்ல வாமா என்று சத்தம் போடுகிறார். அபிராமி நான் பொருள் வாங்க வரல என்று சொல்லிவிட்டு காத்துக் கொண்டிருக்க கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் அங்கு வருகின்றனர்.

அபிராமி சந்தோஷப்படுகிறாள்

அபிராமியை பார்த்த ரேவதி நீங்கள் இங்கதான் பொருள் வாங்குவீங்களா என்று கேட்க ஆமா எங்களால அரிசி காசு கொடுத்து வாங்கி சாப்பிட முடியாது இங்க தான் வாங்குவோம் என்று சொல்கிறாள். பிறகு ரேவதி அபிராமிக்காக வாங்கி வந்த புடவையை கொடுக்கிறாள். உங்கள பாத்தா எனக்கு வெளி ஆள் மாதிரியே தெரியல அத்தை என்று கட்டியணைத்துக் கொள்ள அபிராமி சந்தோஷப்படுகிறாள்.

அதைத்தொடர்ந்து கார்த்திக் வீட்டுக்கு வந்ததும் பரமேஸ்வரி பாட்டிக்கு போன் போட்டு நாளைக்கு நான் சொல்ற இடத்துக்கு வாங்க உங்க பையன் சந்திக்கலாம் என்று சொல்கிறான். பரமேஸ்வரி பாட்டியும் கண்டிப்பாக வருவதாக சொல்கிறாள்.

மேலும் கார்த்திக் சாமுண்டீஸ்வரி அத்தை அவங்க கதையை சொன்னாங்க நீங்க அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுடுங்க என்று சொல்ல பரமேஸ்வரி பாட்டி இத்தனை வயசுக்கப்புறம் எனக்கு மன்னிப்பு கேட்கிறது இல்லை எந்த கவலையும் இல்ல நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்கிறாள்.

சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை முறைக்கிறாள்

அதன் பிறகு சாமுண்டீஸ்வரி, ராஜராஜன் என எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ராஜராஜனுக்கு விக்கல் ஏற்பட கார்த்திக் உங்க அம்மா நினைக்கிறாங்க போல என்று சொன்னதும் சாமுண்டீஸ்வரி கார்த்திக்கை முறைக்கிறாள். உடனே கார்த்திக் பார்த்து பல வருஷம் ஆகுது இல்லையா நினைக்காம எப்படி இருப்பாங்க என்று சமாளிக்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.