புஷ்பா, வேட்டையன் படங்கள் இல்ல.. 2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  புஷ்பா, வேட்டையன் படங்கள் இல்ல.. 2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன?

புஷ்பா, வேட்டையன் படங்கள் இல்ல.. 2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன?

Aarthi Balaji HT Tamil
Dec 11, 2024 12:39 PM IST

இந்த வருடத்தில் கூகுளில் அதிக நபர்கள் செர்ச் செய்த முதல் 10 திரைப்படங்கள் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

புஷ்பா, வேட்டையன் படங்கள் இல்ல.. 2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன?
புஷ்பா, வேட்டையன் படங்கள் இல்ல.. 2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன?

ஸ்ட்ரீ 2

2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் முதல் இடத்தில் பாலிவுட் படமான, ஸ்ட்ரீ 2 இடம் பிடித்து உள்ளது. ராஜ்குமார் ராவ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்த திகில் நகைச்சுவைப் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸானது. வெறும் 50 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தப் படம் இதுவரை 874.58 கோடி ரூபாய் வசூலித்து உள்ளது. 

கல்கி 2898 AD

நாக் அஸ்வினின் கல்கி 2898 AD இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருந்தது. இந்த படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், யாஸ்கின் என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இதில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் ஜூன் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

12th Fail

கடந்த அக்டோபரில் திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றது, 12த் பெயில். விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் மேதா சங்கர் நடித்துள்ள இப்படம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீஸானது. கூகுள் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்களில் இப்படம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

லாபத்தா லேடீஸ்

இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கார் நுழைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது லாபத்தா லேடீஸ். அமீர்கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியுள்ள திரைப்படம் லாபத்தா லேடீஸ். பாலின சமத்துவத்தின் அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் நான்காவது இடத்தில் உள்ளது.

ஹனுமான்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ஹனுமான் படம் வெளியானது. பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் பாகம் இது. தேஜா சஜ்ஜா , வினய் ராய் மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். 2024ல் அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் இதுவும் ஒன்று. 2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

மகாராஜா

விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமான மகாராஜா படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப், இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இப்படம் சீனாவில் 40,000 திரைகளில் வெளியாகி மாஸான வரவேற்பை பெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் ஆறாவது இடத்தில் உள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ்

நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான மலையாளத் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் ஏழாவது இடத்தில் உள்ளது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். விஜய் நடித்த இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இதில் சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்திருந்தனர். இந்த படம் செப்டம்பரில் விநாயக சதுர்த்தி அன்று வெளியானது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் படத்தை தயாரித்துள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடி வசூல் செய்து முதல் இடத்தை பிடித்தது. 2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் 8 ஆம் இடத்தில் உள்ளது.

சலார் 

சலார் பார்ட் 1: போர் நிறுத்தம் கடந்த ஆண்டு டிசம்பரில் பெரிய திரைகளில் வெளியானது, ஷாருக்கானின் டன்கியுடன் மோதியது, பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையைக் கிளப்பியது. ஸ்ருதிஹாசன், டின்னு ஆனந்த், ஜெகபதி பாபு, மது குருசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இரண்டு நண்பர்கள் எதிரிகளாக மாறிய கதையையும், அவர்களின் டைனமிக் கான்சாரை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் இந்த படம் சொல்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 22-ம் தேதி வெளியானது. 2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் 9 ஆம் இடத்தில் உள்ளது.

ஆவேஷம் 

ஜித்து மாதவன் இயக்கத்தில், நடிகர் ஃபஹத் பாசில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘ஆவேசம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. கேங்கஸ்டர் கதையை, நகைச்சுவை பாணியில் திரைக்கதையாக விவரித்தது, விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. 2024 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் 10 ஆம் இடத்தில் உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.