Rashmika Mandanna: "வாழ்க்கை என்பது மிகவும் சிறியது!" விபத்தில் சிக்கிய ராஷ்மிகா - தத்துவத்துடன் இன்ஸ்டா பதிவு-rashmika mandanna reveals she suffered a minor accident - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rashmika Mandanna: "வாழ்க்கை என்பது மிகவும் சிறியது!" விபத்தில் சிக்கிய ராஷ்மிகா - தத்துவத்துடன் இன்ஸ்டா பதிவு

Rashmika Mandanna: "வாழ்க்கை என்பது மிகவும் சிறியது!" விபத்தில் சிக்கிய ராஷ்மிகா - தத்துவத்துடன் இன்ஸ்டா பதிவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 11, 2024 04:44 PM IST

Rashmika Mandanna: வாழ்க்கை என்பது மிகவும் சிறியது. நாளை என்பது நிரந்தரமல்ல என தத்துவ மழை பொழிந்திருக்கும் ராஷ்மிகா மந்தனா, தான் விபத்தில் சிக்கி குணமடைந்தது குறித்து அப்டேட் பகிர்ந்துள்ளார்.

Rashmika Mandanna: "வாழ்க்கை என்பது மிகவும் சிறியது!" விபத்தில் சிக்கிய ராஷ்மிகா - தத்துவத்துடன் இன்ஸ்டா பதிவு
Rashmika Mandanna: "வாழ்க்கை என்பது மிகவும் சிறியது!" விபத்தில் சிக்கிய ராஷ்மிகா - தத்துவத்துடன் இன்ஸ்டா பதிவு (Instagram)

இதுதொடர்பாக அவரே தனது சமூக வலைத்தளபக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். அவர் தனது பதிவில், நான் எனது சமூக வலைதள பக்கத்தை பயன்படுத்தி ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது.

விபத்தில் சிக்கிய ராஷ்மிகா

ஏனென்றால் எனக்கு சிறிய விபத்து ஏற்பட்டது. டாக்டர்களின் அறிவுரைப்படி குணமாக வேண்டும் என்பதற்காக ஒரு மாதம் வீட்டில் ஓய்வில் இருந்தேன்.

நான் தற்போது முழுமையாக குணமாகிவிட்டேன். எனது வேலைகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறேன். அனைவரும் தங்களது நலனுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

வாழ்க்கை என்பது மிகவும் சிறியது. நாளை என்பது நிரந்தரமல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.

பொது நிகழ்ச்சிகளில் தோன்றவில்லை

எப்போதும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் நாயகியாக இருந்து வரும் ராஷ்மிகா, சமீப காலமாக எந்தவொரு பொதுநிகழ்ச்சிகளிலும் தலை காட்டாமல் இருந்து வந்தார். அத்துடன் புகைப்படங்கள், விடியோக்கள் என எந்த பதிவும் வெளியிடாமல் இருந்தார். இதையடுத்து அதற்கான பின்னணி காரணம் பற்றி தற்போது அவரே விளக்கம் அளித்துள்ளார்.

ராஷ்மிகாவின் பதிவை தொடர்ந்து அவர நலனை விசாரித்தும், பாசமழை பொழிந்தும் ரசிகர்கள் பலர் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

ரசிகர்கள் வாழ்த்து மழை

“நீங்கள் நன்றாக இருப்பதைக் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி, ராஷ்மிகா! அந்த நேர்மறை அதிர்வுகளை பிரகாசிக்கவும் பரப்பவும்!”

“ விரைவில் குணமடையுங்கள். சோர்வடைய வேண்டாம். ஆரோக்கியமே செல்வம்” என்றும் “டேக் கேர் ராஷ்மிகா”, “நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்", நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதைக் கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி! விபத்துக்கள் கடினமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் நேர்மறை மற்றும் ஆற்றலுடன் திரும்பி வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த நல்ல அதிர்வுகளை தொடர்ந்து பரப்புங்கள்" என ரசிகர்கள் பலரும் ராஷ்மிகாவுக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

ராஷ்மிகா நடித்து வரும் படங்கள்

ரன்பிர் கபூர் ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்த அனிமல் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது.

தற்போது தனுஷ், நாகார்ஜுனா நடிக்கும் குபேரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

அத்துடன், ராஷ்மிகாவை தேசிய அளவில் பிரபலமாக்கிய புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ளது. இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் சிகந்தர் படத்திலும், விக்கி கௌஷல் நடிக்கும் சாவா படத்திலும் நடிக்கிறார்.

அதிக ஃபலோயர்கள் கொண்டிருக்கும் நடிகை

தென்னிந்தியாவில் வேறு எந்த நடிகையும் செய்யாத புதிய சாதனையை ராஷ்மிகா படைத்துள்ளார். இவரை இன்ஸ்டாகிராம் 44 மில்லியன் (4 கோடியே 40 லட்சம்) பின்தொடர்கிறார்கள். இதன் மூலம் அதிக ஃபாலோயர்களை கொண்ட தென் இந்திய நடிகை என சாதனை புரிந்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சமந்தாவை 35 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.