Dhanush: நிலைகுலைந்து கிடக்கும் மக்கள்.. வாடி நிற்கும் வயநாடு..உதவிகரம் நீட்டிய தனுஷ்! - எவ்வளவு கொடுத்தார்?
Dhanush: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் தனுஷ் உதவிகரம் நீட்டி இருக்கிறார்.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மலைகிராமங்கள், வீடுகள் உள்ளிட்டவை மண்ணோடு மண்ணாகின. இந்த பேரழிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்களின் உடல்பாகங்கள் தனிதனியாக சென்ற சோகமும் அரங்கேறி இருக்கிறது. தங்களது உறவினர்களின் பாகங்களை வைத்து அடையாளம் கண்ட, சம்பந்தபட்டவரின் குடும்பத்தினர் அதற்கு சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்தனர். பாதிப்பட்ட பகுதிகளில் இந்திய ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு படையும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
400 க்கு மேல் சென்ற உயிரிழப்பு
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலச்சரிவில் 800க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டமாகி இருக்கின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கடந்த 1ம் தேதி நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பிரதமர் மோடி நேற்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அப்போது, ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட பாதிப்பின் தன்மை குறித்து பிரதமர் மோடிக்கு அதிகாரிகள் விளக்கினர். அவருடன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் உடன் சென்றனர்.