‘என் பார்ட்னர் சப்போர்ட் இல்லன்னா என்ன ஆகிருப்பேன்னே தெரியாது..' உருகிய ராஷ்மிகா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘என் பார்ட்னர் சப்போர்ட் இல்லன்னா என்ன ஆகிருப்பேன்னே தெரியாது..' உருகிய ராஷ்மிகா

‘என் பார்ட்னர் சப்போர்ட் இல்லன்னா என்ன ஆகிருப்பேன்னே தெரியாது..' உருகிய ராஷ்மிகா

Malavica Natarajan HT Tamil
Dec 18, 2024 10:24 PM IST

தனது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்னென்ன பண்புகளை கொண்டிருக்க வேண்டும் என ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாக கூறி உள்ளார்.

‘என் பார்ட்னர் சப்போர்ட் இல்லன்னா என்ன ஆகிருப்பேன்னே தெரியாது..' உருகிய ராஷ்மிகா
‘என் பார்ட்னர் சப்போர்ட் இல்லன்னா என்ன ஆகிருப்பேன்னே தெரியாது..' உருகிய ராஷ்மிகா

ராஷ்மிகாவின் காதல்

இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தான் காதலிப்பவர் யார் என்பது தான் உங்கள் அனைவருக்குமே தெரியுமே? எனக் கூறினார். 

மேலும் அவருடன் தான் கல்யாணம். புஷ்பா 2 படம் ரிலீஸான பின் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக பேசுவதாக கூறினார். இதனால் ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா காதல் உறுதியானது.

என் வாழ்க்கை துணை இப்படி தான் இருக்கணும்

இந்த சமயத்தில் ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 குறித்த காஸ்மோபாலிட்டன் நிகழ்ச்சியில், தனக்கான துணை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளதால், இவர்கள் இருவர் குறித்த பேச்சு மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது.

ராஷ்மிகா, "ஒரு உறவில் மரியாதை தான் எனது முதல் முன்னுரிமை. நான் ஒருவருக்கொருவர் மதிக்கும்போது தான் அவர்களிடையே பிணைப்பு வலுவாக இருக்கும். பின்னர் நீங்கள் உங்கள் துணையிடம் நேர்மையாகவும், கவனத்துடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும். இந்த குணங்கள் கொண்ட ஒருவருடன் நான் இருக்க விரும்புகிறேன். இவை எல்லாம் இல்லையென்றால், என்னால் அவருடன் பழக முடியாது, "என்று கூறியுள்ளார்.

வாழ்க்கையில் துணை தேவை

மேலும் பேசிய அவர், "நானும் காதலிக்க விரும்புகிறேன். ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு துணை தேவை. நம்முடன் யாருமே இல்லை என்றால் இந்த வாழ்க்கையை வாழ்ந்து என்ன பயன்? உங்கள் ஏற்ற தாழ்வுகள் அனைத்தையும் காண, உங்கள் அருகில் நின்று வாழ்க்கையைக் கொண்டாட ஒருவர் தேவை இல்லையா?" என்றார்.

ஒரு உறவில் அன்பு, பச்சாத்தாபம், அக்கறை, நல்ல இதயம், வெளிப்படைத்தன்மை மற்றும் உண்மை ஆகியவை இருப்பது அவசியம். இது உறவுகளை வளர்க்க தேவையான பண்புகள். ஏனென்றால் இது என்னிடம் இயல்பாகவே இருந்து வருகிறது. என்னைப் போன்ற ஒத்த குணங்களைக் கொண்ட ஒருவருடன் தான் நான் இருக்க விரும்புகிறேன் என்று தனது விருப்பங்களை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா தற்போது 'தி கேர்ள்பிரண்ட்' உள்ளிட்ட 4 படங்களில் நடித்து வருகிறார். ராகுல் ரவீந்திரன் இயக்கும் இப்படத்தில் தீட்சித் ஷெட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதையடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் சிக்கந்தர், விக்கி கௌஷலுடன் சாவா என்ற படத்திலும், தனுஷுடன் குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா தி ரைஸ் மற்றும் புஷ்பா தி ரூல் ஆகிய 2 படங்களும் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால், ராஷ்மிகாவிற்கு தென்னிந்தியாவிலும் சினிமா வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.