ராஷ்மிகாவின் காதலை விவரிக்கும் விஜய் தேவர்கொண்டா! தி கேர்ள் பிரண்ட் டீசர் வெளியானது!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ராஷ்மிகாவின் காதலை விவரிக்கும் விஜய் தேவர்கொண்டா! தி கேர்ள் பிரண்ட் டீசர் வெளியானது!

ராஷ்மிகாவின் காதலை விவரிக்கும் விஜய் தேவர்கொண்டா! தி கேர்ள் பிரண்ட் டீசர் வெளியானது!

Suguna Devi P HT Tamil
Dec 09, 2024 12:04 PM IST

புஷ்பா 2 படத்திற்கு பிறகு ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் "தி கேர்ள் பிரெண்ட்” என்ற படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ராஷ்மிகாவின் காதலை விவரிக்கும் விஜய் தேவர்கொண்டா! தி கேர்ள் பிரண்ட் டீசர் வெளியானது!
ராஷ்மிகாவின் காதலை விவரிக்கும் விஜய் தேவர்கொண்டா! தி கேர்ள் பிரண்ட் டீசர் வெளியானது!

விஜய் தேவர்கொண்டாவின் கவிதைக் குரலில் 

புஷ்பா 2: தி ரூல் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா இப்போது தனது அடுத்த பெரிய வெளியீடான தி கேர்ள் பிரெண்ட் ஒரு பான்-இந்தியன் படத்திற்கு தயாராகி வருகிறார். ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தின் டீசரை இன்று விஜய் தேவரகொண்டா வெளியிட்டார். இதன் டீசர் வீடியோ யூட்யூப்பில் பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. 

தி கேர்ள் ப்ரண்ட் படத்தின் டீசர் இன்று காலை 11 மணி அளவில் வெளியானது. இந்த டீஸரில் விஜய் தேவரகொண்டாவின் கவிதைக் குரலில், பெண் கதாநாயகியான ராஷ்மிகாவின் அழகைப் புகழ்ந்து, ராஷ்மிகாவின் கல்லூரிக் காதல் வாழ்க்கையின் காட்சிகளுடன் திரையில் விரிகின்றன. சரியான கதைக்களம் மறைக்கப்பட்ட நிலையில், ராஷ்மிகாவின் கதாபாத்திரம் ஆண் கதாநாயகன் தீக்ஷித் ஷெட்டி உடனான அவரது சிக்கலான காதல் உறவுடன் போராடுகிறது என்பது தெளிவாகிறது. ஆத்மார்த்தமாக காதலிக்கப்படும் காதலி ஏமாற்றப்படுகிறாள் என்பது போல இந்த டீசர் அமைந்துள்ளது. 

இப்படத்தில் நடிகை அனு இம்மானுவேலும் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அல்லு அரவிந்த் இப்படத்தை வெளியீடுகிறார்., மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் வித்யா கோப்பினிடி மற்றும் தீரஜ் மொகிலினேனி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். வெளியீட்டு தேதி மற்றும் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காதல் கன்பர்மா?

முன்னதாக ஊடகங்களில் விஜய் தேவரக்கொண்டாவுடன் ராஷ்மிகா டேட்டிங்கில் இருப்பதாகவும், காதலித்து வருவதாகவும் பல செய்திகள் உலா வந்துக் கொண்டிருக்கின்றன. மேலும் இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில் இருப்பது போலவும் சில புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. மேலும் விஜய் தேவரக்கொண்டா ஒரு சினிமா நிகழ்ச்சியிலும் நான் ஒரு நடிகையை டேட்டிங் செய்ததாகவும் கூறியதும் பேசு பொருளானது. 

தற்போது விஜய் தேவரக்கொண்டா குரலில் கவிதை வரிகளில் ராஷ்மிகாவின் பட டீசர் வெளியாகி உள்ளது இவர்களது காதல் வதந்தியை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இப்படம் குறித்தான பிற தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.