மார்பிங் போட்டோ..முதலமைச்சர் மீது டைரக்ட் அட்டாக்..சர்ச்சை இயக்குநர் ஆர்ஜிவி மீது வழக்குப்பதிவு! புதிய படத்தால் சர்ச்சை
மார்பிங் போட்டோ மூலம் ஆந்திரா முதலமைச்சர் மீது டைரக்ட் அட்டாக் செய்த சர்ச்சை இயக்குநர் ஆர்ஜிவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய படத்தால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
டோலிவுட் சினிமாவில் முக்கிய இயக்குநராக இருப்பவர் ராம் கோபால் வர்மா. ஆர்ஜிவி என அழைக்கப்படும் இவர் சர்ச்சை இயக்குநராகவே வலம் வருகிறார். தனது படங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள், கவர்ச்சி மற்றும் பாலியலை முன் வைக்கும் கதைகளை காட்டி வரும் இவர், நிஜ வாழ்க்கையில் அரசியல், சினிமா பிரபலங்கள் என சகட்டு மேனிக்கு ஓபனாக விமர்சித்து வருகிறார்.
அந்த வகையில் மறைந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், நடிகரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான என்டிஆர், தற்போதைய முதலமைச்சர் ஆகியோருக்கு எதிராக தொடர்ச்சியாக பேசி வரும் இவர், முன்னாள் முதலமைச்சர் ஜெகமோகன் ரெட்டிக்கு தனது ஆதரவையும் வெளிப்படுத்தி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் ஆந்திரா துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் செயல்களையும் கேலி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
முதலமைச்சர் சந்திரபாபு மீது டைரக்ட் அட்டாக்
இதையடுத்து வியோகம் என்ற படத்தை தயாரித்துள்ளார் ராம் கோபால் வர்மா. இந்த படம் விபத்தில் உயிரிழந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சரப் ஒய்எஸ்ஆர் ரெட்டி மறைவு குறித்து, அதன் பின்னர் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி உருவாக்கிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், அவர் அதை வழிநடத்துவதும் பற்றியும் பேசுகிறது.
இதைத்தொடர்ந்து இந்த படம் தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பதிவில், "தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் NTR ஆனால் அதை அழிப்பவர் CBN" என்று டைரக்டாக சந்திரபாபு நாயுடுவை அட்டாக் செய்துள்ளார்.
மார்பிங் புகைப்படத்தால் சர்ச்சை
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ், ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திரா துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் உள்ளிட்டோர் தொடர்பான புகைப்படங்களை மார்பிங் செய்து இயக்குநர் ராம் கோபல் வர்மா வெளியிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து ராம் கோபால் வர்மா மீது தெலுங்கு தேச கட்சியின் மண்டல செயலாளர் ராமலிங்கம் புகார் கொடுத்துள்ளார். அவர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நற்பெயருக்கு கலங்கம்ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மடிப்பாடு காவல் நிலையத்தில் ராம் கோபால் வர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐடி சட்டப்பிரிவில் வழக்கு
இதுகுறித்து போலீஸார தரப்பில், ‘முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள், துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் தொடர்பான புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக ஊடகங்களில் அவதூறான பதிவை வெளியிட்ட சினிமா இயக்குமர் ராம் கோபால் வர்மா மீது வழக்குபதியப்பட்டது. தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்ட விதிகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
லட்சுமி என்டிஆர் படம்
மறைந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் வாழ்க்கை வரலாறு படம் கதாநாயகடு, மகாநாயகடு என இரண்டு பாகங்களாக 2019இல் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதே ஆண்டில் லட்சுமி என்டிஆர் என்ற படத்தையும் உருவாக்கி வெளியிட்டிருந்தார்.
இந்த படம் என்டிஆருக்கு இன்னொரு மனைவியாக இருந்தவர் என கூறப்படும் லட்சுமியுடனான அவரது வாழ்க்கை பற்றியும், 1995இல் என்டிஆருக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை நடத்தி முதலமைச்சராக ஆன என்டிஆரின் மருமகன் சந்திரபாபு நாயுடுவின் சர்ச்சைக்குரிய பாத்திரத்தை இந்தப் படம் சித்தரித்திருந்து. இந்த படம் ஆந்திராவில் பேசுபொருளை உருவாக்கியது
டாபிக்ஸ்