Bayilvan: மகளின் ஈகோவால் மனஉளச்சல் - ரஜினியின் இந்த நிலைமைக்கு என்ன காரணம் - போட்டு உடைத்த பயில்வான்
Bayilvan: ரஜினிகாந்தின் இந்த நிலைமைக்கு அவரது மகள் ஐஸ்வர்யா தான் காரணம் என்று பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பிரபல youtube சேனலிற்கு பேட்டி அளித்து இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். திடீரென்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், கவலையடைந்து, அவர் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என்பது தொடர்பான கேள்விகளை, சமூக வலைதளங்களில் எழுப்பினர்.
என்ன சிகிச்சை செய்யப்பட்டது?
அவரது அடிவயிற்று பகுதிக்கு அருகில் ஸ்டென்ட் வைக்கப்பட்டது. கேத் லேப்பில் மூன்று சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழு இந்த செயல்முறையை மேற்கொண்டது. தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதால் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன் அடுத்த 2-3 நாட்களுக்கு மருத்துவமனையில் குணமடைவார் என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனை Elective procedure என்று அழைக்கிறார்கள். இந்த சிகிச்சையானது அவருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கலினால் செய்யப்பட்டது அல்ல.