Nagarjuna: “ படம் முழுக்க அதே சிரிப்பு..படுக்கைக்கு செல்லும் போதும்” - மெய்யழகனை புகழ்ந்த ‘கூலி’ வில்லன்!
Nagarjuna: மக்களும், விமர்சகர்களும் இந்தப்படத்தை பாராட்டுவதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்! - மெய்யழகனை புகழ்ந்த ‘கூலி’ வில்லன்!
Nagarjuna: விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படத்திற்குப் பிறகு இயக்குநர் பிரேம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மெய்யழகன். 96 படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோவிந்த் வசந்தா, இப்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார்.
இரு மனிதர்களுக்கு இடையேயான மெல்லிய உணர்வுகளை வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப்படம் தெலுங்கில் ‘சத்யம்சுந்தரம்’ என்று என்ற பெயரில் வெளியானது. இந்த நிலையில் இந்தப்படம் குறித்து நாகர்ஜூனா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அதே சிரிப்போடு சென்றேன்.
இது குறித்து அவர் பேசும் போது, "அன்புள்ள கார்த்தி, நான் உங்களுடைய சத்யம்சுந்தரம் படத்தை நேற்றைய இரவு பார்த்தேன். நீங்களும், அரவிந்த்சாமியும் மிகமிக நன்றாக நடித்து இருக்கிறீர்காள். படம் பார்க்கும் முடியும் வரை எனக்கு முகத்தில் சிரிப்பு இருந்து கொண்டே இருந்தது. நான் படுக்கைக்கு செல்லும் போதும் அதே சிரிப்போடு சென்றேன்.
எனக்கு என்னுடைய குழந்தை பருவ நினைவுகள் அனைத்தும் வந்து சென்றன. நாம் இருவரும் இணைந்து நடித்த ‘தோழா’ திரைப்பட நினைவுகளும் வந்தன. மக்களும், விமர்சகர்களும் இந்தப்படத்தை பாராட்டுவதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்!” என்று பதிவிட்டு இருக்கிறார்.இப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவினை கையாண்டு இருக்கிறார். எடிட்டிங்கினை கோவிந்தராஜ் செய்து இருக்கின்றார். பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் உமா தேவி ஆகியோர் எழுதி இருக்கின்றனர்.
லட்டு விவகாரம்
முன்னதாக, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘சத்யம் சுந்தரம்’(மெய்யழகன் படத்துக்கு தெலுங்கில் சூட்டிய பெயர்) பட நிகழ்ச்சியின்போது தொகுப்பாளர் நடிகர் கார்த்தியிடம்,சிறுத்தை படத்தில் வரும் கண்ணா லட்டு தின்ன ஆசையா என காமெடியாக நடிகர் கார்த்தி பேசும் காட்சியை மீம் ஆக மாற்றி. ‘லட்டு வேணுமா? இன்னொரு லட்டு வேணுமா சார்’ என நகைச்சுவையாகக் கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த நடிகர் கார்த்தி, "லட்டு குறித்து இப்போது பேசக்கூடாது. இது சென்ஸிடிவ் ஆன டாப்பிக்காக தற்போது உள்ளது. எனவே, லட்டு தற்போது வேண்டாம்" என்று சிரித்தவாறே சொன்னார். தொகுப்பாளர் விடாமல், மோட்டசூர் லட்டு வேணுமா? என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த கார்த்தி, "லட்டு இப்போது வேண்டாம்" எனப் பதில் கூறினார்.
கொந்தளித்த ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்:
நடிகர் கார்த்தி பேசிய வீடியோ டோலிவுட்டில் வைரலான நிலையில், " லட்டு பற்றி பலருக்கு சிரிப்பாக உள்ளது. ஒரு சினிமா நிகழ்ச்சியில்கூட லட்டு, சென்சிட்டிவ் ஆன டாபிக் என ஹீரோ சொல்வதைப் பார்த்தேன்.
ஒருபோதும் யாரும் அப்படி பேசவேண்டாம். நான் அந்த ஹீரோவை ஒரு நல்ல நடிகராக மதிக்கிறேன். சனாதன தர்மத்தைப் பற்றி பொது இடத்தில் பேசுவதற்கு முன், ஒரு முறைக்கு நூறு முறையாவது சிந்திக்க வேண்டும்" என்று பவன் கல்யாண் காட்டமாகப் பேசினார்.
மன்னிப்புக்கேட்ட கார்த்தி:
இந்த விஷயம் சர்ச்சையாகியிருப்பதை உணர்ந்த நடிகர் கார்த்தி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நடிகர் கார்த்தி பகிர்ந்திருக்கும் பதிவில், ‘’மதிப்புக்குரிய பவன் கல்யாண் சார். நான் பேசியது தவறான புரிதலை ஏற்படுத்தியதற்கு ஆழ்ந்த மரியாதையுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திருப்பதி வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை பின்பற்றுகிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதைத்தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கார்த்திக்கு ரிப்ளே செய்தார்.
அதில், ‘இதுபோன்ற தலைப்புகளை நாம் அனைவரும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம். எந்த நோக்கமும் இல்லாமல் இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். மேலும் நீங்கள் பேசியது தற்செயலானது என்பதைப் புரிந்துகொள்கிறேன். பொது நபர்களாகிய நமது பொறுப்பு என்பது, ஒற்றுமை மற்றும் மரியாதையை வளர்ப்பது ஆகும். குறிப்பாக நாம் மிகவும் மதிக்கும் நமது கலாசாரம் மற்றும் ஆன்மிக விழுமியங்கள் ஆகியவை. சினிமா மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அதே வேளையில், இந்த விழுமியங்களை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்