Rajini:‘மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப்பருவத்திற்கே நம்மை அழைத்துச்சென்றிருக்கிறார்’: வாழை படம் பார்த்து வாழ்த்திய ரஜினி-rajini said that mari selvaraj has taken us back to his youth after watching the movie vaazhai - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajini:‘மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப்பருவத்திற்கே நம்மை அழைத்துச்சென்றிருக்கிறார்’: வாழை படம் பார்த்து வாழ்த்திய ரஜினி

Rajini:‘மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப்பருவத்திற்கே நம்மை அழைத்துச்சென்றிருக்கிறார்’: வாழை படம் பார்த்து வாழ்த்திய ரஜினி

Marimuthu M HT Tamil
Sep 02, 2024 09:33 PM IST

Rajini:‘மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப்பருவத்திற்கே நம்மை அழைத்துச்சென்றிருக்கிறார்’: வாழை படம் பார்த்து வாழ்த்திய ரஜினியின் பதிவு வைரல் ஆகிவருகிறது.

Rajini:‘மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப்பருவத்திற்கே நம்மை அழைத்துச்சென்றிருக்கிறார்’: வாழை படம் பார்த்து வாழ்த்திய ரஜினி
Rajini:‘மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப்பருவத்திற்கே நம்மை அழைத்துச்சென்றிருக்கிறார்’: வாழை படம் பார்த்து வாழ்த்திய ரஜினி

இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வாழை படக்குழுவினருக்கு அளித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘’மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழை படம் பார்த்தேன். ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு.

மாரி செல்வராஜ் தன்னுடைய இளமைப் பருவத்திற்கே நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார். அதில் அந்தப் பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது.

மாரிசெல்வராஜை வாழ்த்திய ரஜினி:

மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குநர் என்பதை, இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். மாரிசெல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்’’ என தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்,நடிகர் ரஜினிகாந்த் இந்தப் பதிவு வைரல் ஆகி வருகிறது.

இதுதொடர்பாக மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் தளப்பதிவில் வெளியிட்டுள்ளக் குறிப்பில், ‘’ அன்று பழைய தகரபெட்டிக்குள் உங்கள் புகைப்படங்களை தேடி தேடி சேகரித்து வைத்த அந்த சிறுவனின் கனவுக்குள்ளிருந்து அவனின் பிஞ்சு விரல்களை கொண்டே எழுதி சொல்கிறேன். உங்கள் வாழ்த்திற்கும் அரவணைப்புக்கும் நன்றிகள் எங்கள் சூப்பர் ஸ்டார் அவர்களே’’ என நன்றிப்பதிவிட்டிருக்கிறார், வாழை பட இயக்குநர் மாரிசெல்வராஜ்.

வாழை வசூல் எவ்வளவு?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. சிறுவயதில் தான் சந்தித்த அனுபவங்களின் தொகுப்பை கதையாக மாற்றி, இந்தப்படத்தில் அவர் காட்சிகளாக வைத்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்தப்படம், தற்போது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Sacnilk தளம் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, முதல் நாளில் 1.15 கோடி வசூல் செய்த வாழைத்திரைப்படம், இரண்டாவது நாளில் 2.50 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில், முதல் வார முடிவிலேயே 8.8கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் படம் வெளியான 10 வது நாளான நேற்றைய தினம், வாழைத்திரைப்படம் 3.85 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் வாழைத்திரைப்படம் மொத்தமாக இந்தியாவில் 26.1 கோடி ரூபாயும், உலகளவில் 30.5 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

முன்னதாக வாழை திரைப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் இட்ட வாழ்த்துப் பதிவு:

இதுதொடர்பாக வாழை பற்றி தனுஷ் கூறுகையில், ’’மாரி செல்வராஜின் வாழை. சிரிக்கவும், கைதட்டி அழவும் தயார் செய்து உள்ளார். உங்களை உலுக்கும் ஒரு உலகத்திற்கும், உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வாழ்க்கைக்கும் முழுக்குப் போட தயாராகுங்கள்.

உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் அழகான படைப்பு வாழை. மாரி மற்றும் குழுவினருக்கு அனைத்து நல்வாழ்த்துகளும். கடவுள் ஆசீர்வதிப்பார். ஓம் நமசிவாய’’எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நடிகர் கார்த்தி இட்ட பதிவில், ‘’நம் பால்ய வருடங்களை அனைவராலும் நினைவு கூற முடியும். ஆனால் அதையே ஒரு திரைக்காவியமாய் படைத்து அதில் நம்மை உள்ளிழுத்து நமக்கு மிக நெருக்கமானவராய் ஆகிவிட்டார் மாரி’’ என்றார்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.