Rajini Love: ரஜினி ஸ்ரீதேவி அழகிய காதல்.. அசத்திய சூப்பர் ஸ்டார்ஸ்.. காவியமான ஜானி படம்-today marks 44 years since rajinikanth starrer johnny movie released - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajini Love: ரஜினி ஸ்ரீதேவி அழகிய காதல்.. அசத்திய சூப்பர் ஸ்டார்ஸ்.. காவியமான ஜானி படம்

Rajini Love: ரஜினி ஸ்ரீதேவி அழகிய காதல்.. அசத்திய சூப்பர் ஸ்டார்ஸ்.. காவியமான ஜானி படம்

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 15, 2024 07:12 AM IST

Johnny: காவியப் படைப்பாக மாறிய ஜானி திரைப்படம் இன்றுடன் வெளியாகி 44 ஆண்டுகளாகின்றன. இன்று வரை இதுபோன்ற திரைக்கதை கொண்ட காவியம் வரவில்லை என்று கூறினால் அது மிகையாகாது. ரஜினி வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படங்களில் ஜானி திரைப்படத்திற்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு.

Rajini Love: ரஜினி ஸ்ரீதேவி அழகிய காதல்.. அசத்திய சூப்பர் ஸ்டார்ஸ்.. காவியமான ஜானி படம்
Rajini Love: ரஜினி ஸ்ரீதேவி அழகிய காதல்.. அசத்திய சூப்பர் ஸ்டார்ஸ்.. காவியமான ஜானி படம்

ஒரு முழுமையான நடிகனாக ரஜினிகாந்தை மக்கள் உணர்ந்தது இந்த திரைப்படத்தில் தான். ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்து தனது தனித்துவத்தை நிரூபித்த திரைப்படம் இது.

இரு வேறு கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் நடித்து இரண்டு வாழ்க்கையை கச்சிதமாக வெளிக்காட்டி இருப்பார். இயக்குனர் மகேந்திரனின் ஒவ்வொரு எழுத்துக்களும் காட்சிகளாக இந்த திரைப்படத்தில் வெளிக்காட்டப்பட்டிருக்கும்.

காதல்

காதல் இரண்டு பேரை எப்படி மாற்றுகிறது என்பது தான் இந்த திரைப்படத்தின் அடித்தளம் ஆகும். திருடனாக வாழும் ஒரு ரஜினி, மேடை பாடகி ஒருவரின் ரசிகராக மாறுகிறார். மேடை பாடகி ஸ்ரீதேவிக்கு திருடன் ரஜினி மீது காதல் ஏற்படுகிறது.

முதலில் ஏற்றுக்கொள்ள மறுக்கும் திருடன் ரஜினி, ஸ்ரீதேவியின் காதலின் ஈர்ப்பால் திருந்தி வாழ ஆசைப்பட்டு அவர் மீது விருப்பம் கொள்கிறார். முடி திருத்தும் தொழிலாளியாக வேலை செய்யும் ரஜினி, தனது வீட்டில் வேலை செய்யும் தீபாவின் மீது காதல் கொள்கிறார். ஏழை பெண்மணியான தீபாவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்.

முடி திருத்தும் ரஜினி

முடி திருத்தும் ரஜினியிடம் வசதிகளை அனுபவித்து விட்டு அவரை விட வசதியான ஒருவரை தேடி சென்று விடுகிறார். இதனால் கோபமடைந்த ரஜினி தீபாவை கொலை செய்துவிட்டு தப்பி விடுகிறார். இந்த கொலைப்பழி திருடன் ரஜினி மீது விழுகிறது.

ஒரு காதல், ஒரு நல்லவனை கொலையாளியாக மாற்றுகிறது. ஒரு திருடனை நல்லவனாக மாற்றுகிறது என்பதை இரு வேறு கோணங்களில் தெளிவாக இயக்குனர் மகேந்திரன் காட்சிப்படுத்தி இருப்பார்.

ரஜினி நடிப்பு

ரஜினியின் அசாத்திய நடிப்பு, அவர் ஒரு நல்ல நடிகன் என்பதை நிரூபித்து இருக்கிறது. திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இளையராஜா காதல் தருணங்களில் செதுக்கியிருக்கும் பின்னணி இசை சொல்லவே தேவையில்லை. இன்று வரை பலரது செல்போன்களின் அதுதான் காலர் டியூன்.

படத்தில் மிகப்பெரிய சண்டைகளுக்கு வாய்ப்பு இருந்தும், சண்டை காட்சிகள் இல்லாமல் காதலோடு கதையை நகர்த்தி இருப்பார் மகேந்திரன். இப்படி ஒரு கதையை நகர்த்த முடியுமா என பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய திரைப்படம் தான் ஜானி.

இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் திருடனாக நடித்த ரஜினிகாந்த் கடைசிவரை ஸ்ரீதேவியை தொட்டு நடிக்கவே இல்லை. திரைப்படம் முழுக்க காதலோடு பயணம் செய்யும் இருவரும் தொடாமலே நடித்து இருப்பார்கள்.

ஒருபக்கம் இளையராஜா வெறியாட்டம் ஆடி இருப்பார். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளன. இன்றுவரை இரவு நம்மை தூங்க வைக்கும் பாடல்களாக அனைத்தும் இருக்கும். ஒரு படத்தில் அனைத்தும் சரியாக அமைந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு ஜானி திரைப்படம் ஒரு முக்கிய உதாரணமாகும்.

காவியப் படைப்பாக மாறிய ஜானி திரைப்படம் இன்றுடன் வெளியாகி 44 ஆண்டுகளாகின்றன. இன்று வரை இதுபோன்ற திரைக்கதை கொண்ட காவியம் வரவில்லை என்று கூறினால் அது மிகையாகாது. ரஜினி வாழ்க்கையை புரட்டி போட்ட திரைப்படங்களில் ஜானி திரைப்படத்திற்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.