RaghuThatha Twitter Review: நல்ல மெசேஜ்..தெறிக்கவிட்ட கீர்த்தி சுரேஷ் - ரகு தாத்தா ட்விட்டர் விமர்சனம்-keerthy suresh starrer raghuthatha twitter review by fans - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raghuthatha Twitter Review: நல்ல மெசேஜ்..தெறிக்கவிட்ட கீர்த்தி சுரேஷ் - ரகு தாத்தா ட்விட்டர் விமர்சனம்

RaghuThatha Twitter Review: நல்ல மெசேஜ்..தெறிக்கவிட்ட கீர்த்தி சுரேஷ் - ரகு தாத்தா ட்விட்டர் விமர்சனம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 16, 2024 12:19 AM IST

கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ரகு தாத்தா இன்று வெளியாகியுள்ளது. படம் ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா என்பதை பார்க்கலாம்.

RaghuThatha Twitter Review: நல்ல மெசேஜ்..தெறிக்கவிட்ட கீர்த்தி சுரேஷ், ரகு தாத்தா ட்விட்டர் விமர்சனம்
RaghuThatha Twitter Review: நல்ல மெசேஜ்..தெறிக்கவிட்ட கீர்த்தி சுரேஷ், ரகு தாத்தா ட்விட்டர் விமர்சனம்

அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை தி பேமிலி மேன் வெப்சீரிஸின் கதாசிரியான சுமன் குமார் இயக்கியுள்ளார்.

கதை

முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி இந்தியாவை ஆட்சி செய்து வரும் காலத்தில் வள்ளுவன்பேட்டை என்று கிராமத்தில் இந்தி கற்றுக் கொடுக்கும் சபா இருக்கக் கூடாது என போராடி அதற்கு பூட்டுப் போடும் கயல்விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்). ஆனால் இந்தி சபாவை திறந்த தீருவேன் என இருக்கும் இந்தி பண்டிதர் (ஆனந்த சாமி) ஒருவர் இருக்கிறார்.

வங்கியில் பணிபுரிந்து வரும் கீர்த்தி சுரேஷ், இந்தி படித்தால் தான் புரமோஷன் கிடைக்கும் என்ற நெருக்கடி ஏற்படுகிறது. க. பா என்ற பெயரில் சிறுகதைகளையும் எழுதி வரும் அவருக்கு தமிழ் செல்வன் (ரவிந்திர விஜய்) ரசிகராக உள்ளார்.

தாத்தா எம்.எஸ். பாஸ்கருக்கு கொடிய நோய் பாதிப்பால் இறந்துவிடுவார் என கூறப்பட, தாத்தாவின் கடைசி ஆசைகளில் ஒன்றாக பேத்தியின் திருமணம் இடம்பெறுகிறது.

தன்னை புரிந்துக் கொண்டும் தனது பெண்ணிய கருத்துக்களை மதிக்கும் நபராக இருக்கும் தமிழ் செல்வனையே திருமணம் செய்துக் கொள்ளலாம் என நினைக்கும் கயல்விழி, இந்தி கற்கிறாரா, இந்தி சபாவுக்கு என்ன ஆனது என்பதற்கான விடையாக படம் உள்ளது.

ட்விட்டர் விமர்சனம்

1970 காலகட்டத்தில் நடக்கும் அரசியல் காமெடி படமான ரகு தாத்தா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்திருக்கும் கருத்துகளை பார்க்கலாம்.

#ரகுதாதாவை ரசித்தேன். சில அசத்தல் யோசனைகள் மற்றும் கடைசி 20 நிமிடங்கள் பிளாஸ்டாக அமைந்தது.

கீர்த்தி சுரேஷ், சுமன், ரவீந்திர விஜய், இஸ்மத்பானு, ஆனந்தசாமி மற்றும் குப்தாவாக நடித்த பையன் சூப்பர் ஷோ காட்டியுள்ளனர்... ஆல் தி பெஸ்ட் என ரசிகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், மிகவும் துணிச்சலான முயற்சி. அனைத்து பெண்களும் பார்க்க வேண்டிய படமாக கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படம் இருப்பதாக இன்னொரு எக்ஸ் பயனாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

நகைச்சுவையான மற்றும் நுட்பமான திரைக்கதை படம் முழுவதும் எங்களை ஈடுபடுத்துகிறது

குறிப்பாக க்ளைமாக்ஸ் நகைச்சுவையாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது! என படம் குறித்து மற்றொரு பாராட்டும் பகிரப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் ஷோ பார்த்த கீர்த்தி சுரேஷ்

ரசிகர்கள் ஆராவத்துக்கு மத்தியில் திரையரங்கில் வைத்து ரகுதாத்தா சிறப்பு காட்சியை பார்த்து ரசித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதுதொடர்பான விடியோ காட்சிகளும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன

ரகு தாத்தா படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வந்தாலும், ஒரு சிலர் எதிர்மறை கருத்துகளையும் பகிர்கிறார்கள். ஒரு முறைக்கு மேல் படத்தை பார்க்க முடியாது, நகைச்சுவை இல்லாவிட்டால் படம் வேஸ்ட் தான் என்கிற ரீதியில் பேசி வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.