தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  M. S. Bhaskar: ரூ.120யில் மாளிகை கட்ட போவதில்லை.. ரசிகர்களிடம் கட்டன் ரைட்டாக பேசிய எம்.எஸ்.பாஸ்கர்!

M. S. Bhaskar: ரூ.120யில் மாளிகை கட்ட போவதில்லை.. ரசிகர்களிடம் கட்டன் ரைட்டாக பேசிய எம்.எஸ்.பாஸ்கர்!

Aarthi Balaji HT Tamil
Jun 14, 2024 12:30 PM IST

M. S. Bhaskar: 'லாந்தர்' ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய எம். எஸ். பாஸ்கர் எதிர்மறையான விமர்சனங்கள் குறித்த தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

ரூ.120யில் மாளிகை கட்ட போவதில்லை.. ரசிகர்களிடம் கட்டன் ரைட்டாக பேசிய எம்.எஸ்.பாஸ்கர்
ரூ.120யில் மாளிகை கட்ட போவதில்லை.. ரசிகர்களிடம் கட்டன் ரைட்டாக பேசிய எம்.எஸ்.பாஸ்கர்

சாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம், 'லாந்தர்'. இதில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லாந்தர் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

லாந்தர் ஆடியோ வெளியீட்டு விழா

'லாந்தர்' ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய எம். எஸ். பாஸ்கர் எதிர்மறையான விமர்சனங்கள் குறித்த தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும் பார்வையாளர்கள் கொடுக்கும் 120 ரூபாயில் திரைப்பட தயாரிப்பாளர்கள் அரண்மனை கட்டப் போவதில்லை என்று கூறினார். 

நல்ல விஷயங்களைப் பகிருங்கள்

ஒரு படம் பிடித்திருந்தால் அதைப் பற்றிய நல்ல விஷயங்களைப் பகிருங்கள் என்று பார்வையாளர்களைக் கேட்டுக் கொண்டார். எதிர்மறையான விஷயங்களைப் பகிர்வதன் மூலம் மற்றவர்கள் படம் பார்ப்பதைத் தடுக்க வேண்டாம் என்றும் அவர் பார்வையாளர்களைக் கேட்டு கொண்டார். 

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசுகையில்,  ” இந்த படத்தின் இயக்குநருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் படத்தின் படப்பிடிப்பை 23 நாட்களில் முடித்து விட்டார். தயாரிப்பாளர் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறாரோ அதே அளவு நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

பொது மக்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நான் நேரிடையாக பார்த்திருக்கிறேன். இந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

திறமைகள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அது எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம். நான் பொது மக்களுக்கு ஒன்று சொல்ல கொள்கிறேன். ஒரு படம் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் அதை நான்கு பேரிடம் சொல்லுங்கள்.

படம் நல்லா இல்ல போகாதீங்க

அதே படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை உங்களுக்குள் வைத்து கொள்ளுங்கள். படத்துக்கு செல்பவர்களிடம் அந்த படம் நல்லா இல்ல போகாதீங்க என சொல்ல வேண்டும்.

ஒரு படம் எடுக்க எவ்வளவு பேர் உழைக்கிறார்கள், கஷ்டப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். படப்பிடிப்பில் விபத்துகள் ஏற்பட்டு எவ்வளவு பேர் இறந்து கூட போயிருக்கிறார்கள். உங்களிடம் வாங்கும் 120 ரூபாய் வைத்து மாளிகை கட்டப்போவது இல்லை.

ஈக்கு தலையாக இருக்கவே விரும்புகிறேன்

குடும்பங்கள் வாழும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு வந்தால் நடிப்பேன். ஆனால் அதிகமாக சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்கிறேன். சிங்கத்துக்கு வாலாக இருப்பதை விட ஈக்கு தலையாக இருக்கவே விரும்புகிறேன்.

120 ரூபாய் வைத்து மாளிகை கட்டப்போவது இல்லை என எம். எஸ். பாஸ்கர் பேசியது சர்ச்சைய கிளப்பி உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.