ஆர்ஆர்ஆர் வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை புரிந்த புஷ்பா 2 ! முதல் நாள் வசூலில் அள்ளியது எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஆர்ஆர்ஆர் வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை புரிந்த புஷ்பா 2 ! முதல் நாள் வசூலில் அள்ளியது எவ்வளவு தெரியுமா?

ஆர்ஆர்ஆர் வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை புரிந்த புஷ்பா 2 ! முதல் நாள் வசூலில் அள்ளியது எவ்வளவு தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 06, 2024 12:19 PM IST

ஆர்ஆர்ஆர் வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை புரிந்த புஷ்பா 2, இந்தியா பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிக பெரிய ஓபனிங்கை தந்துள்ளது. படத்தின் முதல் நாள் இந்திய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ஆர்ஆர் வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை புரிந்த புஷ்பா 2 ! முதல் நாள் வசூலில் அள்ளியது எவ்வளவு தெரியுமா?
ஆர்ஆர்ஆர் வசூலை பின்னுக்கு தள்ளி சாதனை புரிந்த புஷ்பா 2 ! முதல் நாள் வசூலில் அள்ளியது எவ்வளவு தெரியுமா?

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2: தி ரூல் என்ற பெயரில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஆர்ஆர்ஆர் படத்தை முந்தியுள்ளது. இதுவரை முதல் நாளில் அதிக வசூலை பெற்ற பான் இந்தியா படமாக இருந்த எஸ்எஸ் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் பட இருந்து வந்த நிலையில், தற்போது சுகுமார் - அல்லு அர்ஜுன் காம்போவின் புஷ்பா 2 அந்த இடத்தை பிடித்துள்ளது.

புஷ்பா 2 முதல் நாள் வசூல் எவ்வளவு

திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்களை வெளிப்படுத்து Sacnilk.com இணையத்தளத்தின் தகவலின்படி, டிசம்பர் 5ஆம் தேதி வெளியான புஷ்பா 2 படத்தின் முதல் நாள் வசூல், இரவு 10 மணியளவில், அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ. 160 கோடி வசூலித்துள்ளது.

இது தற்போது முதல் நாளில் அதிக வசூலை செய்திருந்த ஆர்ஆர்ஆர் படத்தை விட அதிகமாகும். எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்திருந்த ஆர்ஆர்ஆர் படம் முதல் நாளில் ரூ. 133 கோடி வசூலித்தது. புஷ்பா 2: தி ரூல் ஒட்டுமொத்தமாக 80.14% தெலுங்கு ஆக்கிரமிப்பைக் கொண்டிருந்தது.

முதல் நாளில் ரூ. 100 கோடிக்கு மேல் இந்திய அளவில் வசூலித்த டாப் படங்கள் பின்வருமாறு

  • புஷ்பா 2 - ரூ. 160 கோடி
  • ஆர்ஆர்ஆர் - ரூ. 133 கோடி
  • பாகுபலி 2 - ரூ. 121 கோடி
  • கேஜிஎஃப் - ரூ. 116 கோடி

மூன்று மில்லியன் டிக்கெட்டுகள் 

புஷ்பா 2 படம் ரிலீஸுக்கு முன்பே அட்வான்ஸ் புக்கிங்கில் 3 மில்லியன் டிக்கெட் வரை விற்பனையாகி மற்றொரு சாதனையும் புரிந்துள்ளது. இதுபற்றி சினிமா டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பிரபல இணையத்தளமான புக்மைஷோ (BookMyShow.com) சிஓஓ ஆஷிஷ் சக்சேனா கூறும்போது, "புஷ்பா 2: தி ரூல் படம் அதிகாரப்பூர்வமாக வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது, அட்வான்ஸ் புக்கிங்கில் 3 மில்லியன் டிக்கெட்டுகளைக் கடந்தது விற்பனை செய்துள்ளது. இது இந்தியாவிலேயே மிக அதிகம். அத்துடன் ஆண்டின் இறுதியில் இது நடந்திருப்பது அற்புதமாக நிகழ்வாக உள்ளது.

பான் இந்தியா படமாக இருந்து வந்திருக்கும் புஷ்பா 2, பாக்ஸ் ஆபிஸ் வசூல்களில் மேலும் பல வரலாறுகளை திருத்தி அமைக்கும் என எதிர்பார்க்கலாம்.

உலக அளவில் முதல் நாளில் அதிக வசூலை பெற்ற இந்திய படம் என்ற பெருமை ஆர்ஆர்ஆர் படத்துக்கு உள்ளது. இந்த படம் படம் உலகம் முழுவதும் முதல் நாள் ரூ. 275 கோடி வசூலை ஈட்டியது. இதற்கு அடுத்தபடியாக ரூ. 217 கோடியுடன் பாகுபலி இரண்டாவது இடத்திலும், ரூ. 175 கோடி வசூலுடன் கல்கி 2898 ஏடி படம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதற்கிடையே புஷ்பா 2 உலக அளவில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ. 250 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா சீரிஸ் படங்கள்

கடந்த 2021இல் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் முதல் பாகமாக புஷ்பா: தி ரைஸ்

வெளியானது. செம்மர கடத்தலை மையப்படுத்தி ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருந்த இந்த படம் ரூ. 350 கோடிக்கு மேலு வசூலை ஈட்டியது. இதையடுத்து முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் புஷ்பா 2 படம் புஷ்பா: தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், முதல் நாளிலேயே ரூ. 250 கோடிக்கு மேல் வசூலிக்கும் என கணிக்கப்படும் நிலையில், மிக பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, மலையாள நடிகர் ஃபஹத் பாசில், ஜெகபதி பாபு, சுனில் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். முதல் பாகத்தில் இடம்பிடித்த ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடிகை சமந்தா டான்ஸ் ஆடிய நிலையில், இரண்டாம் பாகத்தில் இடம்பிடித்திருக்கும் கிஸ் என்ற பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.