மாஸ்.. மாஸ்.. மாஸ்.. புஷ்பா 2 தி ரூல் படத்தின் ட்ரெய்லர் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட முக்கியத் தகவல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மாஸ்.. மாஸ்.. மாஸ்.. புஷ்பா 2 தி ரூல் படத்தின் ட்ரெய்லர் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட முக்கியத் தகவல்

மாஸ்.. மாஸ்.. மாஸ்.. புஷ்பா 2 தி ரூல் படத்தின் ட்ரெய்லர் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட முக்கியத் தகவல்

Marimuthu M HT Tamil Published Nov 15, 2024 04:34 PM IST
Marimuthu M HT Tamil
Published Nov 15, 2024 04:34 PM IST

மாஸ்.. மாஸ்.. மாஸ்.. புஷ்பா 2 தி ரூல் படத்தின் ட்ரெய்லர் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட முக்கியத் தகவல் குறித்துப் பார்க்கலாம்.

மாஸ்.. மாஸ்.. மாஸ்.. புஷ்பா 2 தி ரூல் படத்தின் ட்ரெய்லர் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட முக்கியத் தகவல்
மாஸ்.. மாஸ்.. மாஸ்.. புஷ்பா 2 தி ரூல் படத்தின் ட்ரெய்லர் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட முக்கியத் தகவல்

புஷ்பா படம் எத்தகையது?:

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' முதல் பாகம் டிசம்பர் 17, 2021அன்று வெளியிடப்பட்டது. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடும், புஷ்பா என்கிற புஷ்பராஜின் எழுச்சியைப் பற்றி, இப்படம் காட்சியமைக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் முதலீடுசெய்து எடுக்கப்பட்ட இப்படம், பாக்ஸ் ஆபிஸில், 360 கோடி வசூல்செய்து சாதனைப் படைத்தது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு அல்லு அர்ஜூன் கதையம்சம் உள்ள படத்தில் நடிப்பதற்காக வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல், முழுக்க 'புஷ்பா 2' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

மேலும், புஷ்பா: தி ரைஸ் (2021) பல இதயங்களை வென்றதற்கு ஒரு முக்கியக் காரணம், படத்தில் புஷ்பராஜூவாக அல்லு அர்ஜூனும் ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனாவும் அற்புதமாக நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்ட்ரியும் சூப்பராக இருந்தது.

புஷ்பா 2 திரைப்பட நடிகர்கள்:

புஷ்பா 2 திரைப்படத்தினை, புஷ்பா 1 படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் சுகுமாரே எழுதி இயக்கி இருக்கிறார். படத்திற்கான வசனத்தை ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார். ‘’புஷ்பா 2: தி ரூல்'' படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் மீண்டும் நடித்துள்ளனர். இதில் அல்லு அர்ஜூன் ’புஷ்பராஜ்’ என்னும் கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா ’ஸ்ரீவள்ளி’ என்னும் கதாபாத்திரத்திலும் மற்றும் ஃபஹத் பாசில், பன்வர் சிங் ஷெகாவத் ஆகிய கதாபாத்திரத்திலும் மீண்டும் நடித்துள்ளனர்.

புஷ்பா 2 எத்தனை மொழிகளில் ரிலீஸ்:

இந்தப் படம் 2021ஆம் ஆண்டு வெளியான ’’புஷ்பா: தி ரைஸ்’’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படம் இந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் வரக்கூடிய டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.

புஷ்பா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது, ரஷ்ய, ஜப்பானிய மற்றும் சீன மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிட்டடித்த புஷ்பா 2 பாடல்கள்:

இந்நிலையில் புஷ்பா படத்தின் தயாரிப்பாளர்கள் ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜூனின் பிறந்தநாளில் ஒரு சிறப்பு டீஸரை வெளியிட்டனர். அதில் அல்லு அர்ஜூன் ’ஜதாரா’ என்னும் தெலுங்கு பழங்குடியினர் கெட்டப்பில் காணப்பட்டார். அதேபோல், ’புஷ்பா புஷ்பா புஷ்பராஜ்’ என்னும் முதல் சிங்கிள் பாடலும் வெளியானது. அதனைத்தொடர்ந்து புஷ்பா 2 படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடலும் வெளியாகியானது. புஷ்பா 2 படத்தின் பாடல்கள் அனைத்தையும் தமிழில் கவிஞர் விவேகா எழுதியுள்ளார். ’’சூடான தீ கங்கு மாதிரி.. இருப்பானே என் சாமி.. பார்க்கத்தான் பாறை.. உள்ளேயே வேற..’’என அனைத்து மக்களுக்கும் புரியும்படி எளிய தமிழில் விவேகா எழுதியுள்ளார். இப்பாடல்கள் இரண்டும் சமூகவலைதளங்களில் ஹிட்டாகின.

தமிழ்நாட்டில் யார் வெளியீடு?

இந்நிலையில் பல ஆண்டுகால காத்திருப்புக்குப் பின், ஒரு வழியாக டிசம்பர் 5ஆம் தேதி ‘ புஷ்பா: தி ரூல்’ திரைப்படம் வெளியாவதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.

இதுதொடர்பாகப் பேசிய புஷ்பா 2 படத் தயாரிப்பாளர், ’’தமிழ்நாட்டில் விஜய் சார், அஜித்குமார் சார் & ரஜினிகாந்த் சார் தவிர, மற்ற எந்த நட்சத்திரங்களும் முதல் நாள் இரட்டை இலக்க பாக்ஸ் ஆபிஸ் வசூலைத் தொடவில்லை. புஷ்பா 2க்கு முதல் நாளிலேயே இரட்டை இலக்க பாக்ஸ் ஆபிஸ் வசூல் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தி கோட் திரைப்படத்திற்கு 806 திரையரங்குகளில் படம் ரிலீஸானதுபோல், இப்படத்திற்கும் ரிலீஸாகும்’ எனப் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

புஷ்பா 2 தி ரூல் ட்ரெய்லர் எப்போது வெளியீடு:

புஷ்பா 2 தி ரூல் படத்தின் ட்ரெய்லர் முழுக்க மாஸாக 2 நிமிடங்கள் 44 நொடிகளுக்கு கட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ட்ரெய்லர் தனித்துவமாகவும், ரசிகர்களை ஹைப் ஏத்தும் வகையிலும் இருப்பதாகவும் தெரிகிறது. புஷ்பா 2 தி ரூல் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, நவம்பர் 17ஆம் தேதி பாட்னா நகரின் காந்தி மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. யூட்யூபில் இந்தப் படத்தின் ட்ரெய்லரை மாலை 6.03 மணிக்கு எதிர்பார்க்கலாம் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெரிவித்துள்ளது.