சமந்தா வேண்டாம்.. அவங்கள கூப்டுங்க.. - புஷ்பா 2 - வில் குத்தாட்டம் போட ரெடியான கிளாமர் பாம் ஸ்ரீலீலா
புஷ்பா 2 தி ரூல்’ படத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலில், அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தில் இடம் பெற இருக்கும் சிறப்புப் பாடலில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார் என்று படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது
'புஷ்பா: தி ரைஸ்'ஸின் தொடர்ச்சியான 'புஷ்பா2: தி ரூல்' படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும், அவரது மனைவியாக வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர்.
முன்னதாக, 'புஷ்பா: தி ரைஸ்' படத்தில் இடம்பெற்ற 'ஊ அண்டாவா' பாடல் உலகளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக மாறியது. இந்தப்பாடலில், நடிகை சமந்தா அல்லு அர்ஜூனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு இருந்தார். இந்த நிலையில், அடுத்த பாகத்தில் இடம் பெறும் சிறப்பு பாடலில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார்.
விரைவில் டிரெய்லர் அறிவிப்பு விரைவில் வரவிருக்கும் நிலையில், சிறப்புப் பாடல் குறித்த இந்த லேட்டஸ்ட் அப்டேட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா கோரியோகிராஃப் செய்துள்ளார்.
படக்குழு விபரம்
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' முதல் பாகம் டிசம்பர் 17, 2021அன்று வெளியிடப்பட்டது. ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபடும், புஷ்பா என்கிற புஷ்பராஜின் எழுச்சியைப் பற்றி, இப்படம் காட்சியமைக்கப்பட்டது. 250 கோடி ரூபாய் முதலீடுசெய்து எடுக்கப்பட்ட இப்படம், பாக்ஸ் ஆபிஸில், 360 கோடி வசூல்செய்து சாதனைப் படைத்தது. மேலும் இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு அல்லு அர்ஜூன் கதையம்சம் உள்ள படத்தில் நடிப்பதற்காக வேறு எந்தப் படத்திலும் கமிட்டாகாமல், முழுக்க 'புஷ்பா 2' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
மேலும், புஷ்பா: தி ரைஸ் (2021) பல இதயங்களை வென்றதற்கு ஒரு முக்கிய காரணம், படத்தில் புஷ்பராஜூவாக அல்லு அர்ஜூனும் ஸ்ரீவள்ளியாக ராஷ்மிகா மந்தனாவும் அற்புதமாக நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்ட்ரியும் சூப்பராக இருந்தது.
புஷ்பா 2 திரைப்பட நடிகர்கள்:
புஷ்பா 2 திரைப்படத்தினை, புஷ்பா 1 படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் சுகுமாரே எழுதி இயக்கி இருக்கிறார். படத்திற்கான வசனத்தை ஸ்ரீகாந்த் விசா எழுதியுள்ளார். ‘’புஷ்பா 2: தி ரூல்'' படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் மீண்டும் நடித்துள்ளனர். இதில் அல்லு அர்ஜூன் ’புஷ்பராஜ்’ என்னும் கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா ’ஸ்ரீவள்ளி’ என்னும் கதாபாத்திரத்திலும் மற்றும் ஃபஹத் பாசில், பன்வர் சிங் ஷெகாவத் ஆகிய கதாபாத்திரத்திலும் மீண்டும் நடித்துள்ளனர்.
புஷ்பா 2 எத்தனை மொழிகளில் ரிலீஸ்:
இந்தப் படம் 2021ஆம் ஆண்டு வெளியான ’’புஷ்பா: தி ரைஸ்’’ படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். இப்படம் இந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் வரக்கூடிய டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.
புஷ்பா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது, ரஷ்ய, ஜப்பானிய மற்றும் சீன மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்