படம் நல்லா இருந்தால் ஓடும்.. நான் எடுத்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் குப்பை படம்.. தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்
படம் நல்லா இருந்தால் ஓடும்.. நான் எடுத்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் குப்பை படம்.. தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பகீர் பேட்டியளித்துள்ளார்.
இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஒரு கேவலமான குப்பை படம் என்றும்; ஸ்ரேயாவை சரியா பயன்படுத்தவில்லை என்றும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பகீர் பேட்டியளித்துள்ளார்.
மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ’’ கங்குவா படம் பார்த்திட்டு, டைரக்ட் பண்றவன் ஒழுங்காம படத்தை எடுக்காமல், மக்களின் பேச்சுரிமையை நிறுத்த முயற்சிசெய்யக்கூடாது. நீங்கள் ஒழுங்க படம் எடுக்காமல் இரண்டாயிரம் கோடி வசூலிக்கும்ன்னு சொல்லி ஏமாத்தி படத்தை விற்றால், எவ்வளவு நாளைக்கு மக்கள் பார்ப்பாங்க. முதலில் ஏமாற்றுவதை நிறுத்துங்க.அதுதான் அரசியல்வாதி ஏமாத்துறான்ல. சினிமாக்காரன் உண்மையைப் பேசுங்க. படத்தைப் போட்டுப் பார்க்கும்போது, அது ஓடுமா, ஓடாதுன்னு சொல்ற அளவுக்கு சினிமா தயாரிப்பாளருக்கு அறிவே கிடையாது.
பிறகு எதற்கு பேசுறீங்க. ஒழுங்கான படம் எடுத்து ஓடவில்லை என்றால் வருத்தப்படலாம். திருப்பூர் சுப்பிரமணியம் மாதிரியான ஆட்கள் எல்லாம் அடுத்தவர்கள் பற்றி கவலைப்படும் ஆட்கள் கிடையாது. தான் மட்டும் வாழணும். அடுத்தவங்க செத்தால் கவலையில்லைன்னு இருக்கிற மனிதாபிமானமற்ற மக்களாகத்தான் சினிமாவில் இருக்காங்கே.
’நல்ல படத்தை நைட் பன்னிரெண்டு மணிக்கு ரிலீஸ் செய்தாலும் ஓடும்'
முட்டாள்தனமாக படம் எடுத்திட்டு மக்களை குறைசொல்வதை நிறுத்தணும். மவுத் டாக்குன்னு ஒன்னு இருக்கு. நல்ல படத்தை நைட் பன்னிரெண்டு மணிக்கு ரிலீஸ் செய்தாலும் ஓடும். நன்றாக இல்லையென்றால் படம் ஓடாது. இவனுங்க கத்திட்டே இருக்கவேண்டியது தான். யானையைக் கூட்டிட்டு வந்தோம். குதிரையைக் கூட்டிட்டு வந்தோம்ன்னு. உண்மையாக படத்தில் கன்டென்ட் இருக்கணும். இன்ட்ரெஸ்ட்டாக இருக்கணும். எமோஷனலாக இருக்கணும்.
ஏன் அமரன் ஓடுது. அதில் எமோஷன் இருக்குது. நிறைய டைரக்டர் சாதியை வைச்சு எடுத்தால், அவங்களுக்கு எப்பட்டி மனித உணர்வு தெரியும். மனிதனுக்கு மனதில் ஈரம் இருக்கு. அதைக் கசியவிட்டால் படம் ஓடும். இல்லையென்றால் ஓடாது. அந்த அடிப்படை கூட தெரியாதா.
கத்திக்கிட்டு ஆடிக்கிட்டு இருந்தால் படம் ஓடும்ன்னு நினைக்கிறாங்கே. அது இரண்டு நாளைக்கு குதிக்கும். மூன்றாவது நாள் படுத்திரும். ரஜினியை வைத்து ஒரு பொம்மை படம் எடுத்தாங்கே. அது எல்லாம் ஓடுச்சா. இதற்கான தவறை தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஒத்துக்கொள்ளணும். அப்போது தான் அடுத்த படத்தில் அதைச் சரிசெய்யமுடியும்.
’வடிவேலுவுக்கு பின்னடைவு இதனால் தான் வருது’:
நான் ஒரு படம் எடுத்தேன் சார், வடிவேலுவை வைத்து, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்று. குப்பை படம் சார். குப்பையில் கேவலமான குப்பை. நான் படத்தைப் பார்த்திட்டு எங்க ஆட்களை அறையப் போயிட்டேன். ஒன்று காமெடி இருக்கணும். இல்லை ஏதாவது இருக்கணும். எதுவுமே இல்லாமல் படம் எடுத்தால் எப்படி ஓடும். அதற்காக நான் புலம்ப முடியாது. யாரையும் குறை சொல்லமுடியாது.
யாரையுமே குறை சொன்னால், அதற்குப் பதில் பேசுவாங்களே ஒழிய, உணர்ந்து பார்க்குறவன் முன்னேறிடுவான். அதை உணர்ந்து பார்க்காமல் தான், வடிவேலுவுக்குப் பின்னடைவு வருது.
உங்களைக் குறை சொல்றாங்க என்றால் அது பற்றி நினைத்து, தவறுகளை திருத்திக்கொண்டால் முன்னேறுவான்.
இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஸ்ரேயாவை எப்படி பயன்படுத்தணும்னு தெரியாமல் சொதப்பினார்கள். ஏ.எம்.ரத்னம் மகன் ஹீரோவாக நடித்த படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்தார். இருந்தாலும் படம் சொதப்பல்.
இயக்குநர்கள்கிட்ட நான் சொல்றது எல்லாம், சினிமாவின் பழைய வரலாறை எடுத்துப் பார்க்கணும். எது ஓடும். எது ஓடாது. எப்படி எடுக்கணும்னு யோசிக்கணும். என்னைக்கேலி செய்து ஒன்றும் ஆவதில்லை’’எனப் பேட்டியளித்துள்ளார், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.
நன்றி:மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனல்
பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
டாபிக்ஸ்