முரளி, வடிவேலுவை மிரட்டிய விஜயகாந்த்.. என்னை டார்ச்சர் பண்ணாங்க.. சுந்தரா டிராவல்ஸ் தயாரிப்பாளர் பகீர்!
Sundhara Travels : சுந்தரா டிராவல்ஸ் தயாரிப்பாளர் தங்கராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் வடிவேலு முரளி இருவரும் என்னை டார்ச்சர் பண்ணதாக அவர் கூறியிருக்கிறார்.
மற்ற மொழிகளை சேர்ந்த படங்கள், தமிழில் ரீமேக்காகி நகைச்சுவையில் ஹிட் அடித்தது, ஏராளமாக இருக்கிறது. அப்படி ஓரு குடும்பத்தை சேர்ந்த படம் தான், சுந்தரா டிராவல்ஸ். மலையாளத் திரைப்படமான ‘ ஈ பறக்கும் தளிகா ’ என்னும் படத்தில் இருந்து, தமிழில் ரீமேக்காகி ஹிட்டானது.
இப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியானது. நடிகர்கள் முரளி, ராதா, வடிவேலு மற்றும் ஒரு ஓட்டை சுந்தரா டிராவல்ஸ் என்னும் பஸ் கூட்டணியில் வெளியாகி, நகைச்சுவையில் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
சுந்தரா டிராவல்ஸ் படத்தை இயக்குநர் அசோகன் இயக்கி இருந்தார். பரணி இசையமைத்திருந்தார். இப்படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் பார்த்துக்கிட்டால் டிங் டிங்’ என்னும் பாடல் இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது.
என்னை டார்ச்சர் பண்ண முரளி & வடிவேலு
இந்நிலையில் டூரிங் டாக்கீஸ் என்ற youtube சேனலுக்கு சுந்தரா டிராவல்ஸ் தயாரிப்பாளர் தங்கராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் வடிவேலு முரளி இருவரும் என்னை டார்ச்சர் பண்ணதாக அவர் கூறியிருக்கிறார்.
அந்த பேட்டியில் ”இந்த படத்தை எடுத்து முரளிக்கும் எனக்கும் பிரச்சனை ஆனது. என்ன பிரச்சனை என்றால் அவரு கொஞ்சம் சாப்பிடுவாரு சாப்பிட்டால் வேற மாதிரி மாறி விடுவார். வடிவேலும் அப்படித்தான். இவர்கள் இரண்டு பேரும் என்னை டார்ச்சர் பண்ணி என்னை டென்ஷன் ஆக்கியதால் இந்த படத்தை விட்டு விடலாம் எடுக்க வேண்டாம் என முடிவெடுத்தேன்.
பின்னர் நான் நேராக விஜயகாந்த் சந்திக்க சென்றேன். அவரிடம் சென்று இந்த மாதிரி நடந்து விட்டது எனக் கூற அவர் எவன்டா அது எட்றா வண்டிய அப்படி என்று சொல்லி வந்து எவன்டா இது இப்படி செய்வது தொலைத்து விடுவேன் இனி ஏதாவது நடந்தால் என்னிடம் சொல்லு என்று கூறினார்.
பின்னர் முரளியை அழைத்து நீ வெள்ளி தட்டில் சாப்பிட்டு இருப்பாய் இவர் மிகவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுக்கிறார் இனி இது போன்ற பிரச்சனை வரக்கூடாது. இது இனி என்னுடைய படம் என கூறிவிட்டு சென்றார். இவ்வாறு அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பார்.
சுந்தரா டிராவல்ஸ் கதை
கோபிகிருஷ்ணா ( முரளி )வும், அழகுவும் ( வலுவேலு ) நண்பர்கள். தந்தையின் மூலம் சாலை விபத்தில் இழப்பீடாக கிடைத்த பேருந்தினை வைத்திருக்கிறார், கோபி. ஆனால் பேருந்தின் தோற்றம் அச்சுறுத்தும் வகையிலும் சிரிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. அந்த பேருந்தின் பொயர் தான் சுந்தரா டிராவல்ஸ். இதையே படத்தின் பெயராக வைத்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட பேருந்து ஒரு மினி வீடு போல் செயல்படுகிறது. இந்தப் பேருந்து வீட்டில் கோபிக்கு உற்ற தோழனாக இருப்பவர் அழகு, கீளினராகவும் தான்.
நடமாடும் உணவகம்
இதில் அழகுவின் பாஸ்போர்ட்டை பேருந்தில் இருக்கும் எலி ஒன்று, தின்று அவரது வெளிநாட்டுக் கனவினை சிதைத்துவிடுகிறது. இதனால், அழகு அடிக்கடி அந்த எலியைக் கொல்ல துரத்துகிறார். இந்த காட்சிகள் எல்லாம் திரையில் நகைச்சுவையினை ஏற்படுத்துகின்றன. அதே போல், இந்த பேருந்தினுள், நடமாடும் உணவகத்தை நடத்த கோபியின் நண்பர்கள் உதவுகிறார்கள். அப்போது யார்,பெயர் என்று தெரியாத ஒரு இளம்பெண் ( ராதா ), அந்த வாகனத்தில் தஞ்சம் புகுகிறார். ஆரம்பத்தில் கோபியும், அழகும் அப்பெண்ணை பேருந்தை விட்டு வெளியே துரத்த முயற்சிக்கின்றனர்.
காயத்திரிக்கு திருமண ஏற்பாடு
ஒரு கட்டத்தில் அவரை போலீசார் அழைத்துச் சென்று, அப்பெண்ணின் தந்தையிடம் ஒப்படைக்க முயல்கிறார்கள். அப்போது தான், அப்பெண்ணின் உண்மையான பெயர் காயத்திரி என்றும், தந்தை அரசியலில் சேர வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறியதும் தெரியவருகிறது.
அதன் பின், காயத்திரிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கும் போது தான், கோபி தான் அப்பெண்ணை காதலித்ததை உணர்கிறார். கோபியும் அழகும் காயத்திரியின் வீட்டில் நுழைகின்றனர். அப்பெண்ணின் தந்தையின் சம்மதத்துடன் காயத்திரியை கரம் பிடிக்கிறார்.
டாபிக்ஸ்